பக்கம்:வீரர் உலகம்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

         தமிழில் சிறந்ததென்று போற்றப்பெறும் பொருள் இலக்கணத்தில் ஒரு பகுதி புறப்பொருள் இலக்கணம். புறப்பொருளின் இலக்கணத்தைச் சொல்லும் நூல்களும் இலக்கியமாக அமைந்த பனுவல்களும் தமிழில் பல உள்ளன. புறப்பொருள், பெரும்பாலும் வீரத்தின் பல்வேறு நிலைகளைச் சொல்வது. முடியாட்சியிருந்த பழங்காலத்தில் போர் நிகழ்ச்சிகள் எவ்வாறு நடந்தன என்பதும், மன்னர்கள் படைகளைக் காப்பாற்றிப் பகைவர்களை வெல்வதற்கு என்ன என்ன வகையில் முயன்றனர் என்பதும் போன்ற பல செய்திகளை அந்நூல்கள் காட்டுகின்றன. அவற்றிலிருந்து தமிழ் மக்கள் உள்ளத்தே கனன்று பொங்கிய வீர உணர்வைத் தெரிந்து கொள்ளலாம்.   அகப்பொருள் இலக்கியங்கள் அத்தனையும் கற்பனைக் காட்சிகள் அடங்கியவை. ஆனால், புறப் பொருள் இலக்கியங்களாக வழங்கும் பழம் பாடல்களில் பெரும்பான்மையானவை வரலாற்றோடு சார்ந்த உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவை. சங்க காலத்து நூல்களாகிய புறநானூறு, பதிற்றுப் பத்து என்பவற்றிலுள்ள பாடல்களையும் அவற்றிற்குப் பின்னுள்ள குறிப்புக்களையும் பார்த்தால் இவ்வுண்மை புலனாகும்.

தொல்காப்பியப் புறத்திணை இயலும், புறப்பொருள் வெண்பாமாலைச் சூத்திரங்களும் இன்றும் இந்த வீரர் உலக நிகழ்ச்சிகளை அறியத் துணை செய்கின்றன. அப்படியே புறநானூறும் பதிற்றுப்பத்தும் புறப்பொருள் வெண்பா மாலையில் உள்ள உதாரணச் செய்யுட்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/4&oldid=1088609" இலிருந்து மீள்விக்கப்பட்டது