பக்கம்:வீரர் உலகம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ வீரர் உலகம் உணவுப்பொருள் போதிய அளவுக்குக் கிடைக்கவில்லை. இதனே அறிந்த சேரன் தமிழ்நாட்டிலிருந்து உணவுக்குரிய தானியங்களே மிகுதியாக அனுப்பிப் பாரதப் போர் புரிந்த படைவீரர்களுக்கு உணவு அளிக்கச் செய்தானும், இவ்வாறு பெருஞ்சோறு ஒரு பெரிய போரில் அளித்த பெருமையால் அந்தச் சேர மன்னனுக்குப் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்ற பெயர் வழங்கலாயிற் று. t

முரஞ்சியூர் முடிநாக ராயர் என்ற புலவர் அந்த அரசனைப் பாராட்டிப் பாடும்போது இந்த நிகழ்ச்சியைச் சொல்கிருர். அசைகின்ற பிடரி மயிரையுடைய குதிரை களப் பெற்ற பஞ்ச பாண்டவரோடு பகைத்து கிலத்தைக் கைப்பற்றிய, பொன் தும்பைப்பூவை யணிந்த நூற்று வராகிய கெளரவர்கள் போர்க்களத்தில் பேர்ர் செய்து அழிய, அந்தப் போரில் பெருஞ்சோருகிய மிக்க உணவை எல்லையில்லாமல் அளித்தவனே! என்று பாடுகிருர்,

"அலங்குளைப் புரவி ஐவரொடு சி ைஇ

நிலந்தலக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈண்ரம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோப்!”. (அலங்கு உளே-அசையும் பிடரி மயிர். சி&ன.இ. கோபித்து. தலைக்கொண்ட கவர்ந்த பதம்-உணவு. வரையாது-கட்டுப்பாடு இன்றி.

இங்கே வரையாது கொடுத்தோய்’ என்பதற்கு, ..இன்ன கட்சியினர் என்று வேறு பிரித்துப் பாராமல் அளித்தவனே! என்றும் பொருள் கொள்ளலாம். இந்தப் புறநானூற்றுப் பாடலுக்கு உரை எழுதிய பழைய உரை யாசிரியர் அப்படித்தான் கொண்டார். இதனை, பெருஞ் சோருகிய மிக்க உணவை இரு படைக்கும் வரையாது

1. புறநானூறு, 3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/43&oldid=648011" இலிருந்து மீள்விக்கப்பட்டது