பக்கம்:வீரர் உலகம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. போருக்கு எதிரே போர்

பகைவருடைய நாட்டைக் கைப்பற்றும் நோக்கத் தோடு சென்று படையெடுப்பதை வஞ்சித்திணை என்னும் புறப்பொருள் திணைக்குள் அடக்கிப் பாடுவார்கள். அவ்வாறு படையெடுத்துச் செல்லும் அரசன் வஞ்சிமாலை அணிந்து செல்வான். படைவீரர்கள் வஞ்சிப்பூவை அணிவார்கள். - -

பகையரசன் தன் நாட்டைக் கைப்பற்றுவதை எண்ணிப் போருக்கு வந்தால் சும்மா இருப்பது வீரம் ஆகுமா? எந்த காட்டின்மேல் அவன் படையெடுத்து வந்தானே. அந்த நாட்டு அரசன், வந்த போருக்கு எதிரே போரிட்டுத் தன் வீரத்தை கிலோட்டுவான். வலியப் போருக்குப் போகாவிட்டாலும் வந்த சண்டையை வி.க்கூடாது அல்லவா? அவ்வாறு எதிர்த்து கிற்கும் அரசனுடைய படைச் செயல்களைக் காஞ்சி என்னும் தனித் திணையாகப் பிரித்துச் சொல்வது ஒருசார் புலவர்களின் மரபு. தொல்காப்பியர் அவற்றையும் வஞ்சியிலேயே அடக்கிச் சொல்வார். -

தன் காட்டின் மேல் படையெடுத்து வந்த வேந்தனுக்கு எதிரே படையுடன் சென்று பொரும் அரசன் காஞ்சிப் பூவை அணிவது வழக்கம்.

'வேஞ்சின மாற்ருன் விடுதர, வேந்தன் காஞ்சி சூடிக் கடிமுனை கருதின்று."

(வேகின்ற கோபத்தையுடைய பகையரசன் - வந்து தன் எல்லையில் பாகாயம் கொள்ள, அரசன் காஞ்சிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/46&oldid=648014" இலிருந்து மீள்விக்கப்பட்டது