பக்கம்:வீரர் உலகம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வீரர் உலகம்

பூவை அணிந்து காவல் செய்ய வேண்டிய இடங்களைக் காப்பதைக் கருதுவது காஞ்சித்தின.)

இவ்வாறு புறப்பொருள் வெண்பா மாலே காஞ்சித் தினேயின் இலக்கணத்தை வகுக்கிறது.

,★

படையெடுத்து வந்த பகையரசனே எதிர்த்துப் பொர வேண்டும் என்று தீர்மானித்த அரசன் அந்தச் செய்தியை எங்கும் பரப்பச் செய்கிருன். துடியும் முரசும் முழங்கு கின்றன. பகைவர்கள் காட்டுக்குள் புகும் வழிகள் எவை என்று ஆராய்ந்து, அங்கெல்லாம் காவல் படையை கிறுத்துகிருர்கள். நாட்டுக்குள்ளே புகுந்த பின்னர்ப் பகைவர்களைப் பொருது ஒட்டுவதைவிட, எல்லேயில் நின்றபடியே அவர்களேத் தடுத்து நிறுத்திப் பொருவதே சிறந்தது அல்லவா? அரசன் தன்னுடைய படைவீரர் களில் மிகவும் சிறந்தவர்களாக இருப்பவர்களே ஆராய்ந்து எடுத்து எல்லேயைப் பாதுகாக்க அனுப்புகிறன். போர் வந்தால், ஆயுதங்களுக்கு என்ன செய்வது என்று கையைப் பிசைவது வீரத்துக்கு அழகன்று. அரசன் பல வேறு படைக்கலங்களே முன்பே சேமித்து வைத்திருக் கிருன். இப்படி ஒர் ஆபத்து வரும்போது புதிய ஆயுதங் களைச் செய்யத் தொடங்குவதோ, பிறரிடம் வாங்குவதோ எளிய காரியம் அன்று என்பதை அவன் அறிவான். ஆகவே, வருமுன் காக்கும் அறிஞர்களின் அறிவுரையைக் கேட்டு, எத்தகைய ஆயுதங்கள் வேண்டியிருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, அவற்றைத் தொகுத்து வைத்துள்ளான் அரசன். தண்ணிர்த் தாகம் எடுக்கும்போது கிணறு வெட்டப் புகுந்தால் தாகம் தணிவது எப்படி? . . . .”

அரசன் இப்போது அந்தப் படைக்கலங்களே எடுத்துத் தகுதி அறிந்து படைத்தலைவர்களுக்கும் வீரர்களுக்கும்

%

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/47&oldid=648015" இலிருந்து மீள்விக்கப்பட்டது