பக்கம்:வீரர் உலகம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. போருக்கு எதிரே போர் 41

வழங்குகிறன். அவற்றைப் பெற்ற வீரர்களுக்கு உண்டான மகிழ்ச்சி சொல்லி முடியாது. அவர்கள் தோள்கள் பூரிக்கின்றன. வெற்றியையே பெற்றுவிட்ட ஊக்கம் பொங்குகிறது. 3. * ×

இவ்வாறு அரசன் வீரர்களுக்குப் படைகளே அளிக்கும் செயலேப் படைவழக்கு என்று சொல்வார்கள். இந்த வழக்கத்தைச் சிலப்பதிகாரத்தில் ஒர் இடத்தில் இளங்கோவடிகள் குறிக்கிருர்: கோவலன் திருமணம் ஆனவுடன் தனியே ஒரு மாளிகையில் கண்ணகியுடன் இல்வாழ்வு நடத்தப் புகுகிருன். அப்போது கண்ணகியின் பேரழகைக் கண்டு பாராட்டுகிருன். சிவபெருமான் தான் முடித்த பிறையை உன் நெற்றியாகும்படி வழங்கட்டும்; மன்மதன் தன் கரும்புவில்லே உன் புருவமாகும்படி தரட்டும்; இந்திரன் தன் வச்சிரத்தை கின் இடையாக என்று அளிக்கட்டும்’ என்றும் பிறவாறும் சொல்கிருன். காமன் கரும் புருவமாகக் கரும்பைத் தரட்டும் என்று சொல்கிருன்; அதற்கு ஒரு காரணத்தைக் கூறுகிருன். காமனுக்குப் பெண்களே படை போர் செய்யும் வீரர்களுக்கு அரசன் படை வழங்கும் வழக்கம் உண்டாதலால், உருவிலாளனுகிய காமன் தன் பெரிய கரும்புவில்லை இரண்டு கரும் புருவமாக அமைத்து உனக்குத் தரட்டும்' என்று அவன் கூறுகிருன்.

அடையார் முகனயகத்து அமர்மேம்படுநர்க்குப் படைவழங் குவதோர் பண்புடண் டாகலின் உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில் இருகரும் புருவ மாக ஈக்க

T. ೫ಖLErfgಷಿಸri - (೧೮೧/3rr@ BLTಗೆ GFಬಿಲ್ಲ. போர்க்களம், அமர்மேம்படுகர் போரில் சிறப்படைய இருக்கும் வீரர். உருவிலாளன் . அருங்கன்; காமன், ஈக்க - வழங்கட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/48&oldid=648016" இலிருந்து மீள்விக்கப்பட்டது