பக்கம்:வீரர் உலகம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. போருக்கு எதிரே போர் 48

இதோ படை, முரசு முழங்கவும் ஊது கொம்புகள் ஊதவும் துடி ஒலிக்கவும் வீரர்கள் மிடுக்குச் சொற்களைச் சொல்லவும் நடைபோட்டுச் செல்கிறது. மாற்ருன் வந்து தங்கியிருக்கும் எல்லேயை அடைகிறது. இப்போது போர் நேரடியாகத் தொடங்குகிறது. -

மாற்ருன் முன்பே திட்டமிட்டு இந்தத் தாக்குதலே மேற்கொண்டிருக்கிருன். பெரும் படையுடன் வந்திருக் கிருன். முன்னணிப் படையே கண்டார் அஞ்சும்படி கிற்கிறது. பகைவனே எதிர்த்துச் சென்ற வீரப்படையின் முன்னணியிலே சிறந்த வீரர்கள் இருக்கிருர்கள். எதிரி களின் முன்னணிப் படைக்கு ஏற்றபடி பொருது ஒட்டும் வலிமை படைத்தவர்களாகப் பொறுக்கி அனுப்பியிருக் கிரு.ர்கள்.

இரண்டு முன்னணிப் படைகளும் பொருகின்றன. வந்த பகைவனது படையின் அளவை இவர்கள் கன்கு உணர்ந்து கொள்ளவில்லை. அது மிகப் பெரியதாகவே இருக்கிறது. யோர் கடுமையாக நடக்கிறது. வீரர்கள் கனல் கொப்புளிக்கும் கண்களுடன் போராடுகிருர்கள். அதோ ஒரு வீரன் எவ்வளவு உற்சாகத்துடன் போர் புரிகிருன்! வில்லை வளைத்து அம்பை மாரிபோலப் பொழிகிருன். ஒவ்வொரு முறையும் அவனுடைய அம்புக்கு எதிரியின் படையில் குதிரையோ, வீரரோ பலியாகிரு.ர்கள். பகைவர்களே அவனைக் கண்டு வியப்பை அடைகிருர்கள்.

என்ன இது? இது உண்மைதான? ஆம்; உண்மைதான். அந்தப் பெருவீரனே எதிரியின் படை யிலிருந்து வந்த அம்பு வீழ்த்திவிட்டதே! அவன் தலையைத் தறித்துக் கீழே வீழ்த்திவிட்டது. அந்தோ பரிதாபம் படைவீரர்கள் சற்றே கலங்குகிருர்கள். வீழ்ந்தவன் தலை பகைவர் கையில் அகப்படாதபடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/50&oldid=648018" இலிருந்து மீள்விக்கப்பட்டது