பக்கம்:வீரர் உலகம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வீரர் உலகம்

எடுத்து அரசன நோக்கி ஓடி வருகிறர்கள். அந்த முகத்தில் இன்னும் முறுவல் வாடவில்லை. தன் நாட்டுக் காக உயிர் கொடுத்த பெருமிதந்தான் அந்த முறுவலுக்குப் பொருளோ? .

அரசன் அந்த வீர முகத்தைப் பார்க்கிருன். அவன் முகத்தில் சிறு வாட்டம் படர்கிறது. ஆல்ை இழவு கொண்டாட இதுவா நேரம்? இந்தத் தலையை உறவினர் களிடம் கொடுத்துவிடுங்கள். தலையைக் கொண்டு வந்த வீரனுக்குப் பரிசு கொடுங்கள்’ என்று அரசன் கட்டளை பிறப்பிக்கிருன். இவனுக்குச் சமானமான வீரன் யாரும் இல்லை என்று பெயர் பெற்றவனுடைய தலையை, பகைவன் கொண்டு போகாமல் இங்கே துணிந்து எடுத்து வந்த வீரனுக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும்" என்று வீரர்கள் பேசிக் கொள்கிருர்கள்.

அந்தத் தலைக்கு மாலையிட்டு வீரனுடைய மனைவியிடம் அனுப்புகிறர்கள். அதற்குள் அந்த நங்கையே செய்தியைக் கேள்வியுற்று ஓடி வருகிருள். வீரனுடைய தலையை அவள் கையில் அளிக்கிருர்கள். அவள் அதைக் காண்கிருள். அவள் கண்ணில் நீர் பெருகவில்லை. உற்றுப் பார்க்கிருள். தன் மார்பிலே அதை அணைத்துக் கொள்கிருள். தன் முகத்தோடு சேர்த்து வைக்கிருள். ஒரு பெருமூச்சு வருகிறது. ஆ! இது என்ன? அந்தப் பெண் கீழே விழுகிருளே! அவள் கணவனுடைய தலையும் அவள் கையிலிருந்து நழுவி விழுகிறது. அருகில் உள்ளவர்கள் 1ங்தைபதைத்து ஓடிச் சென்று பார்க்கிருர்கள். அவள் உடலில் உயிர் இல்லை. தன் கணவன் பெற்ற வீர சொர்க்கத்தில் அவனைத் தனியே வாழும்படி செய்ய மன மின்றி அவளும் போய்விட்டாள்!

அவள் உயிர் பிரிந்த அற்புதத்தைப் பின்வரும் பாட்டுச் சொல்கிறது: o: r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/51&oldid=648019" இலிருந்து மீள்விக்கப்பட்டது