பக்கம்:வீரர் உலகம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. போருக்கு எதிரே போர் 45

'கொலே ஆளுக் கூற்றம் கொடிதே கொழுநன் தல ஆளுள் தையலாள் கண்டே - முலேயால் முயங்கிளுள்; வாள்முகமும் சேர்த்தினுள்; ஆங்கே உயங்கிளுள்; ஓங்கிற்று உயிர்.' - கொல்லுதலே கிறுத்தாத யமன் கொடியவன்! இங்கே நடந்ததைப் பார்த்தால் இது தெரியவில்லேயா? தன் கணவனேப் பிரிந்து வாழ விரும்பாத இந்த மங்கை அவன் தலையைச் சிறிதும் இமைக்காமல் உற்று நோக்கிள்ை; தன் மார்போடு வைத்து அணேத்தாள்; அவள் முகம் ஒளி விட்டது; அதளுேடு சேர்த்து முத்தமிட்டாள்; சிறிதே வருக்திள்ை; அவ்வளவுதான்; அவள் உயிர் மேலே போய் விட்டது!’ என்று இந்தக் காட்சியைக் கண்டவர்கள் வியப்படை கிரு.ர்கள்.

இவ்வாறு தலைசிறந்த வீரன் ஒருவன் தன்னல் இயன்ற அளவு பலர் உயிரைப் பலி வாங்கிவிட்டுத் தன் உயிரை விட்டதல்ை, அரசன் தளர்ச்சி அடையவில்லை. அவனுக்கு இப்போது பின்னும் சினமும் ஊக்கமும் பொங்குகின்றன. தன் படைகளே முன்னேறிச் செல்லும் படி செலுத்துகிமு ன். பெருவீரன் வீழ்ந்ததனால் படையிலே சலசலப்பும் தளர்ச்சியும் உண்டாகும் என்று எதிரிகள் எதிர்பார்த்தார்கள். ஆல்ை முன்னேயினும் மும்மடங்கு இந்தப் படை வீறுகொண்டு எழுவதைக் கண்டு அவர்கள் வியந்தார்கள்.

கடும் போரிலே ஒரு மறவன் மார்பில் எதிரிகளின் வேலினல் பெரிய புண் உண்டாகிறது. அதிலிருந்து குருதி வெள்ளமாக வருகிறது. அவளுல் கிற்க முடியவில்லை. அருகில் உள்ளவர்கள் அவனைப் பிடித்து நிறுத்துகிருர்கள். எதிரிகளோ அம்பு மாரியை வீசுகிருர்கள். வீரர்கள். மேலே சென்று போர் செய்யாமல் தன்னைத் தாங்கி

1. புறப்பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/52&oldid=648020" இலிருந்து மீள்விக்கப்பட்டது