பக்கம்:வீரர் உலகம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வீரர் உலகம்

கிற்பதை அவ்வீரன் பார்க்கிருன். தன்னலும் போரிட முடியாமல், பிறரையும் போர் செய்ய விடாமல் தான் இருப்பதை அவன் எண்ணி இரங்குகிருன். திடீரென்று அவனுக்கு ஒரு யோசனே தோன்றுகிறது. பல்லேக் கடித்துக் கொண்டு தன் மார்புப் புண்ணில் வேலே விட்டுக் கிழித்து விடுகிருன். ஒரு கணந்தான்; அடுத்த கணம் அவன் வீர மரணம் பெற்றுவிடுகிருன். அவன் உடலத்தை அங்கே 'விட்டுவிட்டு வீரர்கள் போர் செய்ய முந்துகிருர்கள். 'நம்மைத் தடுத்து கிற்கச் செய்துவிட்டதைப் பொருமல் தன் உயிரைக் கொடுத்தானே! இது அல்லவோ வீரம்? என்று வீரர்கள் அவன் இயல்பைப் பாராட்டுகிரு.ர்கள்.

கீழே விழுந்து கிடக்கும் வீரனது உடலைப் போர்க் களத்தில் உணவு கிடைக்குமென்று வந்த பேய்கள் அணுகுகின்றன. போரில்தான் பேய்களுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்பது ஒரு சாபமாம். ஆகையால் எங்கேயாவது போர் வராதா என்று வயிறு ஒட்டிக் கிடக்கும் பேய்கள் காத்துக் கிடக்குமாம். எங்கும் ஒற்று மையும் சமாதானமும் வளவாழ்வும் சாந்தியும் உண்டாக வேண்டுமென்று பெரியோர்கள் விரும்புவார்கள். பிறர் அடித்துக் கொண்டு அழியும்போது, நாம் கலம் பெறலாம் என்று விரும்புபவர்களும் இருக்கிறர்கள். அவர்கள் பேய்க்கு ஒப்பானவர்கள். பிறருடைய வேற்றுமையிலும், பிரிவு மனப்பான்மையிலும் வாழும் இயல்புடையோர் எக்காலத்திலும் இருக்கிருர்கள். அவர்களைப் பேயாக உருவகம் செய்து புலவர்கள் பாடினர்கள். போர்க்களத் தில் பேய்கள் வந்து கூழ் சமைத்து உண்ட்தாகப் பர்ணி நூல்களில் வரும். அங்கே வரும் காட்சிகள் கற்பனையே ஆலுைம் அவற்றினூடே ஒர் உண்மை புதைந்திருக்கிறது. கவிஞர்கள் நுட்பமான கருத்துக்களே இப்படி அபூதமான காட்சிகளாக்கிப்புல்ப்படுத்துவது ஒரு மரபு. அதைக் கவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/53&oldid=648021" இலிருந்து மீள்விக்கப்பட்டது