பக்கம்:வீரர் உலகம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. யோருக்கு எதிரே போர் 47

சமயம் என்று சொல்வார்கள். தொல்காப்பியத்திலும் இத்தகைய காட்சிகள் வருகின்றன.

இன்னும் வீரனுக்கு உயிர் இருக்கிறதென்று எண்ணி, உயிர் போனவுடன் உண்ணலாம் என்று பேய் அருகே இருந்து காத்திருக்குமாம். பசியோடுள்ளவன் அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் சோற்றைக் கண்டு, ஆக்கப் பொறுப்பதுபோல் இருக்கிறது இந்தப் பேயின் கிலே. ஆலுைம் அதற்குப் பொறுமை இல்லை. ஒரு சுற்றுச் சுற்று கிறது. உட்காருகிறது. மறுபடியும் மிமிர்ந்து நிற்கிறது. வீரனுக்கு அருகில் போய்க் குனிந்து பார்க்கிறது. பக்கத்தில் கிடக்கும வேறு ஒரு குடர்மாலேயைச் சூடிக் கொண்டு சிரிக்கிறது. குருதி வெள்ளத்திலே கிடக்கும் வீரனுடைய கண்ணேப் பார்க்கிறது; அதில் இன்னும் கனல் கொப்புளிக்கிறது. அதல்ை தொட அஞ்சுகிறது பேய்.

'கொட்கும், திமிரும், குறுகும், குடர்சூடிப்

பெட் நகும்பெயரும், பேய்மகள்-உட்கப் புனலங் குருதிப் புலால்வாய்க் கிடந்து கனல விழிப்பவற் கண்டு." . - (கொட்கும்.சுழலும்; பெட்ப-விரும்பும்படி. உட்க. அஞ்ச.1 -

கடைசியில் பேய் துணிந்து வீரன் மார்பில் புண்கணத் தொட்டுத் தோண்டத் தொடங்குகிறது. சில சமயம் தொடாமல் அஞ்சுகிறது. கொஞ்ச தூரம் போய்விட்டு மறுபடியும் வருகிறது. -

உயிர் துறந்த வீரனே எண்ணிப் பலரும் வருந்து கிருர்கள். இவனைப் போலப் போரில் நிற்பவர் யார்? 1. புறப்பொருள் வெண்பா மாலே, 78. ~r;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/54&oldid=648022" இலிருந்து மீள்விக்கப்பட்டது