பக்கம்:வீரர் உலகம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வீரர் உலகம்

இவன் ப்ோரென்னும் கடலேக் கடக்கத் தெப்பத்தைப் போல உதவுகிறவயிைற்றே!’ என்கிருர் ஒருவர். வீரன் என்ருல் சாமானிய வீரன? எவ்வளவு உயர்ந்த பண்புடையவன்! உயர்ந்த பெரியவர்களுக்கு நடுவுே இரும்புத் துணைப்போலத் துளங்காமல் இருக்கும் விறல் வீரயிைற்றே! இனி இவனே எங்கே காணப்போகிருேம்?” என்று புலம்புகிருர் மற்ருெருவர். "இவன் தான் பிறந்த ஊருக்கே உயிர் போன்றவன், ஊர் மட்டுமா? உலகுக்கே உயிர் போன்றவன் என்றே சொல்ல வேண்டும்” என்று வேறு ஒருவர் இரங்குகிறர். அவனுடைய அற இயல்பைச் சொல்லி வருந்துகிருர் ஒருவர்; இவன் மார்பைத் திறந்த வேல், அறம் கிரம்பிய வாயில் ஒன்றை அடைத்து விட்டது. வீரத்தால் பெறும் பொருக்ள யெல்லாம் வாரி வழங்கும் அறமுடையவன் இவன். அப்படி அறம் திறந்த வாயிலை, இவ்வண்ணலின் மார்பைத் திறந்த வேல் அடைத்துவிட்டதே' என்பது அவர் புலம்பல்.

"போர்க்குப் புணே மன்; புரையோர்க்குத் தானுமன்;

ஊர்க்கும் உலகிற்கும் ஓர்உயிர்மன்;-யார்க்கும் அறம்திறந்த வாயில் அட்ைத்ததால், அண்ணல் திறம்திறந்த நீள் இல் வேல்." (புணே -தெப்பம். மன்: இப்போது போய்விட்டானே என்ற இரக்கத்தைக் குறிப்பித்தது. புரையோர்-உயர்ந் தோர். தானு-துரண். நிறம்-மார்பு.1 -

1. பு. வெ. 80.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/55&oldid=648023" இலிருந்து மீள்விக்கப்பட்டது