பக்கம்:வீரர் உலகம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. போரிடைப் பல நிகழ்ச்சிகள்

அதிகமான் நெடுமான் அஞ்சி என்பவன் பழங் காலத்தில் இருந்த பெருவள்ளல். சிறந்த வள்ளல்கள் ஏழு பேரைத் தனியே எடுத்துச் சொல்வது ஒரு வழக்கம். அந்த ஏழு பேர்களில் ஒருவன் அதிகமான். கொடையில் சிறந்த அவன் விரத்திலும் சிறந்திருந்தான். அவனுக்கும் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் போர் மூண்டது. அதிகமான் பலமான கோட்டைக்குள்ளே இருந்து போர் செய்தான். இறுதியில் அதிலிருந்து வெளிவந்து போரிடும்படி ஆயிற்று. அந்தப் போரில் அதிகமான் உயிர் இழந்தான். போர் மிகவும் கடுமையாக கடைபெற்றது. அந்தப் போர் சம்பந்தமாக ஒரு தனிக் காவியமே தமிழில் உண்டாயிற்று. பல புலவர்கள் பாடிய பாடல்கள் அமைத்த அந்தக் காவியத்துக்குத் தகடுர் யாத்திரை என்று பெயர். இப்போது தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி என்று வழங்கும் இ.மே தகடும். அதற்கு அருகில் இன்றும் அதிகமான் கோட்டை என்ற இடம் இருக்கிறது. தகடுரை நோக்கிச் சேரமான் படையெடுத்துச் சென்று வென்றதைச் சொல்வதாதலின் அந்தக் காவியத் துக்குத் தகடுi யாத்திரை என்ற பெயர் உண்டாயிற்று. நூல் முழுவதும் இப்போது கிடைக்கவில்லை. சில பாடல்கள் மட்டும் கிடைக்கின்றன. -

அதிகமான் இறந்துபட்டபொழுது புலவர்கள் மிக வருந்தினர்கள். அவல்ை பல பொருள்களைப் பெற்றவர்கள் அவர்கள். அவர்கள் இரங்கிப் பாடிய பாடல்கள் பல. அதிகமானிடம் பலகாலம் உயிரோடு இருக்கும்படி செய்யும்

dl. e.sv-4 - * ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/56&oldid=648024" இலிருந்து மீள்விக்கப்பட்டது