பக்கம்:வீரர் உலகம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வீரர் உலகம்

நெல்லிக்கனியைப் பெற்ற ஒளவையார் பாடிய பாடல் அவருடைய உள்ளத்தின் துயரத்தை நன்முக எடுத்துக் காட்டுகிறது. பாணர், புலவர், கூத்தர் முதலிய பலருடைய உணர்ச்சியையும் ஒருங்கே புலப்படுத்தும் வண்ணம் அப் பாடல் அமைந்திருக்கிறது.

'எந்த உணவு கிடைத்தாலும் முதலில் பிறருக்குக் கொடுத்துவிட்டு எஞ்சியிருந்தால் அவன் உண்ணுவான். சிறிதளவு மதுவை அவன் பெற்ருலும் எங்களுக்கு ஈந்து விடுவானே! மிகுதியாகப் பெரிய அளவில் அதனைப் பெற்ருல் நாங்கள் முதலில் உண்டு உவகை மிகுதியினல் நாங்கள் பாட, எஞ்சியதைத் தான் உண்ணுவானே! இப்போது அந்தக் காட்சியைக் காண முடியாமல் போயிற்றே!'

'சிறியகள் பெறினே, எமக்கு ஈயும் மன்னே!

பெரியகள் பெரினே, யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே!'

'சிறு விருந்தானுலும் பலருக்கு இலை போட்டு உண்ணச் செய்வான். பெரு விருந்தானல் சொல்லவே வேண்டாம்; அப்போதும் பலரை உண்பிப்பான்!

'சிறுசோற் ரு அம் நனிபல கலத்தன் மன்னே!

பெருஞ்சோற் ரு அம் நனிபல கலத்தன் மன்னே!"

‘எங்கெங்கே நல்ல நல்ல உணவு கிடைக்கிறதோ அங்கெல்லாம் எமக்குத் தந்து எம்மை நிறுத்துவான். எலும்பும் ஊனுணவும் கிடைக்கும் இடங்கள்ே எமக்குக் கொடுப்பான். அம்பும் வேலும் நுழையும் போர்க் களத்தில் தான் முன்போய் நின்று தன் வீரத்தைக் காட்டுவான். ஊணுக்கு முந்தும் எங்களுக்கு ஏற்றவற்றைத் தந்து படைக்கு முந்தும் பெருவீரன் அவன்.” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/57&oldid=648025" இலிருந்து மீள்விக்கப்பட்டது