பக்கம்:வீரர் உலகம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வீரர் உலகம்

புரப்போர் புன்கண் பாவை சோர அஞ்சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில் சென்று வீழ்ந்தன்று அவன் அருநிறத்து இயங்கிய வேலே!' ‘எங்களுக்கு எப்போதும் ஆதாரமாக இருந்த என் அப்பன் இப்போது எங்கே இருக்கிருனே? இனிமேல் வள்ளல் என்று சொல்லி வாயாரப் பாடும் புலவரும் இல்லே; அப்படி யாராவது பாடிலுைம் அவருக்கு ஒரு பொருளே வழங்குபவரும் இல்லே.'

ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ! இனிப், பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை.'

'உலகத்தில் பணம் படைத்தவர்களுக்குப் பஞ்சம் இல்லை. ஆனல் எல்லாரும் தம்மிடம் உள்ளதைக் கொடுக்கிருர்களா? அதுதான் இல்லை. குளிர்ந்த நீர்த் துறையிலே பகன்றை என்ற கொடியில் கிறையப் பூ இருக்கும். அதில் தேன்கூட இருக்கும். ஆனல் அந்தப் பூவை யாரும் அணிந்து கொள்கிறதில்லை. அது தன் பாட்டுக்குப் பூக்கும்; பிறகு வாடிச் சருகாகிவிடும். அது போலப் பணத்தை வைத்துக் கொண்டிருந்தும் பிறருக்குக் கொடுக்காமல் விளுக மாய்கின்ற உயிர்கள் மிகப் பல. எல்லாரும் அதிகமான் ஆகிவிட முடியுமா?

'பணித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்

சூடாது வைகியாங்குப் பிறர்க்குஒன்று ஈயாது வியும் உயிர்தவப் பலவே!" இவ்வாறு சொல்லி முடிக்கிருர் ஒளவையார். பாட்டில் மன்னே என்ற சொல் அடுத்தடுத்து வருகிறது. அது கழிவிரக்கத்தைச் சுட்டி கிற்பது; அதாவது, இப்போது இல்லாமற் போயிற்றே!’ என்ற வருத்தத்தை உள்ளடக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/59&oldid=648027" இலிருந்து மீள்விக்கப்பட்டது