பக்கம்:வீரர் உலகம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வீரர் உலகம்

வாயகன்ற பாத்திரம். உரிஇ-உருவி. புன்கண்-ஒளி இழந்த கண். தேர்ச்சி-ஆராய்ச்சி. வீழ்ந்தன்று-வீழ்ந்தது. நிறம் - மார்பு. ஆசு - பற்றுக்கோடு. பனித்துறை - குளிர்ச்சியை உடைய நீர்த்துறை. பகன்றை-நீர்த்துறை யில் வளரும் ஒரு கொடி. நறை-தேன். வைகியாங்குவீணே இருந்தாற்போல. தவப்பல-மிகப்பல.)

இவ்வாறு பலரும் வருந்தப் பகையரசர் மாள அமர் பொருது வென்ற வீரர்கள் குடித்து மகிழும்படி அரசன் மதுவை வழங்கச் செய்கிருன். அதைச் சொல்வது கட்காஞ்சி.

போரில் இறந்துவிட்ட வீரர்களின் மனேவிமார் தாமும் அவர்களுடன் உயிர்விடத் துணிகின்றனர். வீரர்களின் உடலே எரிக்கும் எரியிலே தாமும் வீழ்ந்து தம் கற்பின் திறத்தை உலகம் போற்றச் செய்கின்றனர். அவர் களுடைய துணிவைக் கண்டு உலகம் அஞ்சுகிறது.

சில சமயங்களில் வீரனுடைய மார்பைத் துளைத்து அவனே வீழ்த்திய வேலையே எடுத்து அதனைத் தன் மார்பில் பாய்ச்சிக்கொண்டு அவன் மனைவி இறந்துபடுவதும் உண்டு. உலகத்தில் கற்பு என்பது நாம் கண்டு அஞ்சும் கடுமையை உடையது. பகைவர் ஒச்சிய வேலைத் தன் மார்பில் ஏற்றுப் போக்களத்தில் வீழ்ந்தான் வீரன். அது பாராட்டுதற்குரியது. ஆனால் அந்த வேலே அவனுடைய மனேவிக்கும் கூற்ருகிவிட்டது. என்ன கடுமையான செயல் இது!’ என்று ஒரு பாடல் சொல்கிறது.

'அவ்வைநீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமைl

வெவ்வேல்வாய் வீழ்ந்தான் - விறல்வெய்யோன்-அவ்வேலே அம்பிற் பிறழும் தடங்கண் அவன்காதற் கொம்புக்கும் ஆயிற்றே கூற்று'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/61&oldid=648029" இலிருந்து மீள்விக்கப்பட்டது