பக்கம்:வீரர் உலகம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. வீரர் உலகம்

வில்லை. மந்தை மங்தையாகப் பல மனைவிமார்களே அந்தப் புரத்தில் வைத்துக்கொண்டிருக்கும் அவர்களே மனக் தால் தன் பெண்களின் வாழ்வு ஒருவகை அடிமை வாழ்வாக முடியும் என்று பாரி எண்ணினன். ஆகவே அவ்ன் தன் பெண்களே அவர்களுக்கு மணம் செய்து கொடுக்க இசையவில்லை. அவன் மறுத்துவிட்டதை உணர்ந்த முடிமன்னர் மூவரும் கோபம் கொண்டனர். பாரி ஏழு வள்ளல்களில் ஒருவன். அவன் புகழ் தமிழ்நாடு எங்கணும் பரவியிருந்தது. புலமையிற் சிறந்த பெருமானகிய கபிலர் அவனுடைய ஆருயிர் கண்பராகவும் அவைக்களப் புலவராகவும் விளங்கினர். இவற்றையெல் லாம் கண்ட முடியுடை மன்னர்களுக்கு முன்பே பொருமை இருந்து வந்தது. இப்போது பாரி தன் பெண் களே மணஞ்செய்து தர மறுக்கவே, இதுவே காரணமாகக் கொண்டு அவனேடு போரிட்டு அவனே அழித்துவிடலாம் என்று எண்ணினர்கள். அவர்கள் தம்மும் கலந்து யோசித்துப் போரிடுவதென்று உறுதி செய்து கொண்டார்கள்.

பறம்பு என்னும் மலேயின்மேல் கோட்டையை அமைத்துக்கொண்டு வாழ்ந்தான் பாரி. அவனுடைய காட்டுக்கும் பறம்பு என்றே பெயர். முந்நூறு ஊர்களே உடையது அது. பாரி நாளடைவில் தன்பால் வந்து பாடும் புலவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒவ்வோர் ஊராக வழங்கிக் கொண்டு வந்தான். அதல்ை அவனுடைய புகழ் எங்கும் பரவியது.

மூவேந்தரும் பறம்பு மலேயை முற்றுகையிட்டார்கள். அவர்களால் பறம்பின்மேல் ஏற முடியவில்லை. கீழிருந்த படியே அம்பை எய்தார்கள். அந்த அம்பால் மேலே இருப்பவர்களுக்கு எந்தத் தீங்கும் உண்டாகவில்லை. அவர்கள் விட்ட அம்புகளே கீழே இருந்த படைகளின்மீது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/63&oldid=648031" இலிருந்து மீள்விக்கப்பட்டது