பக்கம்:வீரர் உலகம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வீரர் உலகம்

தினின்றும் அடித்து ஒட்டியது' என்பது இதன் பொருள். இந்தத் துறைக்கு முனைகடி முன்இருப்பு என்று பெயர்.

இவ்வாறு நடைபெறும் போரினிடையே வேறு சில நிகழ்ச்சிகளும் நிகழ்வதுண்டு. அவற்றைத் தொல் காப்பியத்தின் உரைகாரர் குறித்திருக்கிருர், கடிமரம் தடிதல் என்பது அவற்றில் ஒன்று.

பழங்காலத்தில் ஒவ்வொரு மன்னர் குலத்திற்கும் ஒவ்வொரு காவல் மரம் உண்டு. இப்போது இறைவன் எழுந்தருளிய தலங்களில் சிறப்பாக ஒரு மரத்தைப் போற்றி வழிபடுவார்கள். அதைத் தல விருட்சம் என்பார்கள். அதுபோல வழிவழி வந்த மன்னர்கள் பாதுகாத்து வரும் குல விருட்சத்தையே காவல் மரம் என்றும், கடிமரம் என்றும் சொல்வார்கள். தக்க வீரர்களே வைத்து அந்த மரத்தைக் காத்து வருவது மன்னர் கடமைகளில் ஒன்று. காவல் மரத்துக்கு ஏதேனும் தீங்கு வந்தால் மன்னர் குலத்துக்கே இங்கு வரும் என்ற எண்ணம் இருந்து வந்தது. பகையரசர்கள் அந்தக் காவல் மரத்தை வெட்டிவிடுவார்கள். வெட்டிய மரத் திலிருந்து முரசு செய்து தம் வெற்றிக்குறியாக வைத்து முழக்குவார்கள். -

சேர நாட்டுக்கு மேற்கே மேல்கடலில் சில தீவுகளில் கடம்பர் என்ற அரசர்கள் வாழ்ந்தார்கள். அவர்களுடைய காவல் மரம் கடம்பு. சேரர் அவர்களே வென்றனர். கடம்பரின் காவல் மரத்தை வெட்டி அதைக் கொண்டு முரசு செய்து அடித்தனர். இதைப் பதிற்றுப்பத்து என்ற சங்க நூல் கூறுகிறது.

பலர்மெசித்து ஒம்பிய திரள் பூங் கடம்பின்

கடியுடை முழுமுதல் அமிய எனப் . . . வென்றுளறி முழங்குபண செய்த வெல்போர்,'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/65&oldid=648033" இலிருந்து மீள்விக்கப்பட்டது