பக்கம்:வீரர் உலகம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மதில் முற்றுகை 61.

மதிலின்மேல் பல வகை ஆயுதங்களைச் சேமித்து வைத்திருப்பார்கள். எதிரிகளின்மேல் வீசி அவர்களே அரிக்க அவை உதவும். படைக்கலங்களே எறியும் வீரர்கள் அங்கங்கே மறைவில் கின்று போரிடுவார்கள்: அம்பு முதலியவற்றை மறைவாக வைத்திருக்கும் துவாரங்களும் மறைவிடங்களும் மதிலின்மேல் இருக்கும். ஏணி வைத்து ரருத வகையில் பலவகையான பாது காப்புக்களே மதிலில் அமைத்திருப்பார்கள். மதில்மேல் மறைவாக கின்று அம்பை எய்யும் இடித்துக்கு துப்புழை என்று பெயர். வளேவு வளைவாக மதிலின்மேல் இருக்கும் உறுப்புக்களை ஞாயில் என்று சொல்வார்கள். மதிலுக்குள்ளே வீரர்கள் மறைவாக நிற்பதற்கு மேடைகள் உண்டு. அவற்றைப் பதனம் என்று சொல்லுவார்கள்.

மதிலைச் சுற்றியுள்ள அகழியைக் கடக்கப் பலகை யினுல் பாலம் அமைத் திருப்பார்கள். போர்க்காலங்களில் அவற்றைத் துக்கிவிடுவார்கள். மதிற்கதவுகள் மிகவும் உறுதியானவை. உள்ளே பெரிய பெரிய மரவிட்டங்களேக் கதவுக்குப்பின் பலமாக அமைத்திருப்பார்கள். யானேகளைக் கொண்டு மதிற்கதவுகளே இடித்து மோதுவார்கள். அவை தம்முடைய கொம்புகளால் கதவுகளே மோதும்.

அகழிக்கு அப்பால் காடுகளே வளர்த்திருப்பார்கள். அவற்றை மிளே என்றும் குறுங்காடு என்றும் சொல்வார் கள். அதுவே காட்டிரண். மதிலே முற்றுகையிட்டுப் போர் செய்து வெல்வது என்பது மிகவும் அரிய செயல். மதிலுக்குள் இருப்பவன் மிகவும் பாதுகாப்பாக இருப்பவ தைலின் அவனை எளிதிலே தோல்வியுறச் செய்ய முடியாது. வெளியிலிருந்து உணவுப் பண்டங்கள் போகாதபடி பல காட்கள் புறத்தே தங்கி முற்றுகையிட வேண்டி வரும். . x &

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/68&oldid=648036" இலிருந்து மீள்விக்கப்பட்டது