பக்கம்:வீரர் உலகம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வீரர் உலகம்

மதிலே முற்றுகையிட்டுப் புறத்தே இருந்து போரிடும் பகுதியை உழிஞைத் திணை என்பார்கள். மதிலுக்குள் இருப்பவன் செய்யும் போர்ப்பகுதியை நொச்சித் திணை என்பர். இரண்டையுமே உழிஞை என்று தொல்காப்பியம் கூறுகிறது.

இராமபிரான் இலங்கைக்குச் சென்று இராவண ைேடு போர்செய்வதற்கு முன் விபீடணன் அவன்பால் அடைக்கலம் புகுந்தான். அப்பொழுது இராமன் இலக் குவனேக் கொண்டு அவனுக்கு முடிசூட்டும்படி செய்தான். உறுதியாகப் பகைவனே வென்று விடலாம் என்ற மன வலிமையில்ை செய்த காரியம் இது. இதை, கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம்' என்று தொல்காப்பியர் வகுக் கிருர், பகைவர் காட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயும் கொண்டான்போல வேண்டியோர்க்குக் கொடுத்தலேக் குறித்த வெற்றி' என்பது இதன் பொருள்.

ஒரு வீரனேப் பாராட்டும்போது, "பகைவர்களுடைய மதில் இன்னும் அவர்கள் கையில் இருக்கவும் பாணர் களுக்கு அந்நாட்டிலுள்ளவற்றைக் கொடுப்பதாக உறுதி கூறும் வள்ளன்மையுடையவனே!’ என்று புலவர் ஒருவர் பாடுகிருர்; -

'ஒன்ஞர்

ஆர்னயில் அவர்கட் டாகவும் ... ? பாண் கடன் இறுக்கும் வள்ளியோப்'

என்பது புறநானூற்றில் வருவது.

'இராமன் இலங்கை கொள்வதன்முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது’ என்று உரையாசிரியர் அங்கே எழுதுவர். . -

இவ்வாறு உறுதிமொழி கூறிய அரசன் தன் வலிமை யினுல் தான் கூறியவாறே பகைவரை வென்று தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/69&oldid=648037" இலிருந்து மீள்விக்கப்பட்டது