பக்கம்:வீரர் உலகம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r64 வீரர் உலகம்

செய்வான். இன்று பகலுக்குள் இந்த மதிலேக் கைக் கொள்ளாமல் நான் உண்பதில்லே’ என்று அவன் வஞ்சினம் கூறுகிருன். இப்படிச் சொன்னதைக் கேட்ட புலவர்கள் வியப்படைகிருர்கள். இவன் வயிறு வாட இந்த மதிலே வென்று பலரை அழித்து விட்டுப் பின்பே உண்ணப் போகிருன். இவ்வளவு காள் ஆறுமல் பசித் 'தீயில்ை நலிந்த கூற்றுவனுடைய வயிறு எப்படிப் புடைத்து வெடிக்குமோ, அறியோம் என்கிருங்கள்.

'இற்றைப் பகலுள் எயிலகம் புக்கன்றிப்

பொற்ருரான் போன கங்கைக் கொள்ளாளுல்!-எற்ருங்கொல் ஆருத வெம்பசித்தி ஆற உயிர்பருகி

மாரு மறலி வயிறு.”

(எயிலகம்-மதிலின் உள்ளிடம். பொற்ருரான்.பொன் மாலையை அணிந்த அரசன். போனகம்-உணவு. எற்றும் கொல் - என்ன ஆகுமோ? மறலி - கூற்று வன்.)

இவ்வாறு மதிலே முற்றுகையிடச் செல்லும் அரசனும் நல்ல நாள் பார்த்துக் குடையையும் வாளேயும் புறப்பட விடுவான். முரசத்துக்குப் பூசை செய்து முழக்கும்படி செய்வான்.

தன் படைகளோடு அரசன் புறப்பட்டு விடுகிறன். அவனுடைய ஊக்கத்தையும், பகைவன்பால் கொண்ட சீற்றத்தையும், தக்கபடி ஆராய்ந்து போரை நடத்தும் திறமையையும், போருக்கு ஏற்ற பொருட்சிறப்பையும் கண்டு புலவர்கள் பாராட்டுகிறர்கள்; இவ்வளவு தகுதி களையும் பெற்ற அரசனுக்கு எவ்வளவு பெரிய அரணுக இருந்தால் என்ன? இவனுக்கு அகப்படாத கோட்டையே இல்லை’ என்று வியப்படைகிருர்கள். அரசனுடைய நிலையைக் காணும்பொழுது அவர்களுக்குப் பழைய செய்திகளெல்லாம் நினைவுக்கு வருகின்றன. திருமால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/71&oldid=648039" இலிருந்து மீள்விக்கப்பட்டது