பக்கம்:வீரர் உலகம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மதில் முற்றுகை 65

சோ என்னும் அரணத்தை முன்பு அழித்தான். அவன் தானு இவன்?’ என்று புலவர்கள் பாராட்டுகிரு.ர்கள். 'சிவபிரான் அன்று உழிஞையைச் சூடி வானிலே பறந்த முன்று மதில்களே அழித்தான்’ என்று திரிபுராந்தகனே கினேக்கிருர்கள். வீரர்களில் வீரனுகிய முருகனே மறந்து விடுவார்களா? சூரபன்மனகிய அசுரன் கடலுக்குள் மறைந்து மாமரமாகி கின்ருன். கடலேயே நீரரணுகக் கொண்டு அவன் கின்றபோது தன் வேலை ஒச்சி அவனே அழித்தான் முருகன். இதைப் பாராட்டுகிருர்கள் புலவர்கள். இந்தத் துறையைக் காந்தள் என்று கூறுவர்.

‘கருங்கடலுள் மாத்தடிந்தான்

செழுங்காந்தட் சிறப்புரைத்தன்று.”

(கரிய கடலினிடையே சூரளுகிய மாமரத்தை அழித் தவனுடைய காந்தட்கண்ணியின் சிறப்பை எடுத்துச் சொன்னது.)

பெரும்படை மதிலே நோக்கிச் செல்கிறது. மதிலின் புறத்தே வந்து தங்குகிறது. வீரர்கள் மதிலேப் பார்க் கிருர்கள். அது எளிதிலே கவர்வதற்கு உரியதாகத் தோற்றவில்லை. "வீரபானமாகிய மதுவை மயிலைப் போன்ற மங்கையர் கொடுக்க அதனை உண்டு வீரர்கள் கண்கள் கனல் கொப்புளிக்கப் போர் செய்யத் தொடங்கி, மதிலில் உள்ளவர்கள் அழியும்படி பொருதாலும், பகை யரசனுடைய மதிலே வெல்வது அரிது’ என்று கூறுகின் றனர். புகழ் கெடும்படி நம் உயிரே பெரிதென்று பாதுகாத்துக் கொண்டா நிற்பது? இதைவிட இழிவான காரியம் வேறு இல்லை. எல்லாரும் வாளேயும் கேடயத் தையும் எடுத்துக் கொள்ளுங்கள். மதிலினுள்ளிருந்து அம்பு வருமென்று ஏன் அஞ்ச வேண்டும்? கையில் கிடுகு களே எடுத்துக் கொண்டால் அந்த அம்புக்குப் பயப்படி

வி. உல5ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/72&oldid=648040" இலிருந்து மீள்விக்கப்பட்டது