பக்கம்:வீரர் உலகம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வீரர் உலகம்

வேண்டிய அவசியம் இல்லே' என்று பிறகு தைரியம் கொள்கிருர்கள். கேடயத்தைக் கிடுகு என்றும் தோல் என்றும் சொல்வார்கள். அதை ஏந்தும் படையைக் கிடுகுபடை என்பர். அதன் சிறப்பைச் சொல்லும் துறைக்குத் தோலுழிஞை என்று பெயர்.

மதிலே அணுகுவதற்கு முன்பு மிளேயைக் கடந்து

செல்வார்கள். மிளேயென்பது அகழிக்கு அப்பால் பாதுகாப்புக்காக அமைந்த காடு. அதனே அழித்துவிட்டு மேலே செல்லுகிருர்கள். காட்டுக்கு அப்பால் மகிலேச் சுற்றியிருப்பது அகழி. அதைக் கிடங்கு என்றும் சொல் வார்கள். தோணியைக் கொண்டும் தெப்பம் முதலிய வற்றைக் கொண்டும் அகழியைக் கடக்க முயல்கிரும்கள். அப்பொழுது பகைவர்கள் மதில்மேல் இருந்தபடியே அம்புகளே வீசுகிருர்கள். அப்படி விசியும் அவற்றினின் றும் அவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்கிருர்கள். போர் அகழியிலேயும் நடைபெறுகிறது. இதைப் பாசி நிலை என்பர். நீரின்மேல் மிதந்து அலையும் பாசி போன்ற நிலையில் அந்த வீரர்கள் இருக்கிருர்கள்.

அகழைக் கடந்து ஏறிவிடுகிருர்கள். அப்பால் வானே யளாவிய மதில் இருக்கிறது. அதன்மேல் பெரிய ஏணியைக் கட்டி நிறுத்தி ஏறுகிருர்கள். அப்போது மேலிருந்து மதிலுக்குரிய மன்னனுடைய வீரர்கள் பலவகை ஆயுதங்களே வீசுகிருர்கள். பழங்காலத்தில் அவர்கள் பயன்படுத்திய படைக்கலங்களுக்கு வெவ் வேறு பெயர் இருக்கிறது. கல்லுக்குண்டுகளைப் போன் றன. சில; அவற்றை இடங்கணி என்பர். பாம்பைப் போலச் சில சிறி வரும்; குரங்கைப் போலச் சில பாய்ந்து பற்றும்; அவற்றைப் பாம்பு என்றும் கடிகுரங்கு என்றும் வழங்குவார்கள். வில்லிலிருந்து அம்பை வீசு வார்கள்; வேலை விசுவார்கள்; பழுக்கக் காய்ந்த மணல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/73&oldid=648041" இலிருந்து மீள்விக்கப்பட்டது