பக்கம்:வீரர் உலகம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மதில் முற்றுகை 67

விசுவார்கள். இவற்றுக்கெல்லாம் தப்பிக்கொண்டு முற்றுகையிடும் வீரர்கள் ஏணியின்மேல் ஏறுகிருர்கள். உடும்பைப் போலவும் பாம்பைப் போலவும் விடாப்பிடி யாகப் பற்றிக்கொண்டு ஏறுகிரு.ர்கள்.

எப்படியோ மதிலின்மேல் வீரர்கள் ஏறிவிடுகிருர்கள். மதிலுக்குள்ளேயும் காவற்காடு இருக்கிறது. பறவையைப் போல அதனுள்ளே குதிக்கிருர்கள்.

கொடுமுடிகள் உயர்ந்து கிற்கும் மலையிலிருந்து, கிலத்தைப் பார்த்து அதில் உள்ள இரையைக் கொள்ள கினேக்கும் பறவைக் கூட்டத்தைப்போல, பகைவருடைய பலமெல்லாம் ஒழியும்படி, மத்தளத்தைப் போன்ற வலிய தோளையுடைய வீரர்கள் மதிலுக்குள்ளே ஆரவாரம் செய்தபடி பாய்ந்து இறங்கினர்கள்’ என்று புறப்பொருள் வெண்பா மாலே இந்தக் காட்சின்யச் சொல்கிறது. .

கோடுயர் வெற்பின் நிலம்கண்டு இரைகருதும்

தோடுகொள் புள்ளின் தொகைஒப்பக் - கூடார் முரணகத்துப் பாம முழவுத்தோன் மள்ளர் அரணகத்துப் பாய்ந்திழிந்தார் ஆர்த்து.'

(கோடு-சிகரம். தோடு-கூட்டம். கூடார்-பகைவர். முரண்-பலம். பாற-அழிய முழவு-மத்தளம். மள்ளர்வீரர். அரண் அகத்து-மதிலுக்குள்ளே. இழிந்தார். இறங்கினர்.) - . .

சில பெரிய இராசதானி நகரங்களில் மூன்று மதில்கள் இருக்கும். புற மதில் ஒன்று; அப்பால் இருப்பது இடை மதில்; அதற்கும் அப்பால் அரண்மனையைச் சுற்றியிருப்பது அக மதில். ஒரு மதிலைத் தாண்டி உள்ளே புகுந்து உள்ளே உள்ள காட்டையும் தாண்டுவதற்குள் மதிலுக்குள் உள்ள வீரர்கள் பொருது எதிர்ப்பார்கள். ஒருவாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/74&oldid=648042" இலிருந்து மீள்விக்கப்பட்டது