பக்கம்:வீரர் உலகம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வீரர் உலகம்

வென்று மேல்சென்ருலும் அப்பால் மற்ற இரு மதில் களேயும் வென்று உட்செல்ல வேண்டும்.

மதிலின் புறத்தே முற்றுகையிட்ட படை தங்குகிறது. மதில் குறுக்கே சிற்பது கண்டு படைவீரர்கள் சற்றே தியங்குகிருர்கள். அப்போது காலே கேரம். மதிலுக்குள் ளிருந்து முரசம் முழங்குகிறது. அதன் ஒலி புறத்தே உள்ள வீரர்களுக்குச் சவுக்கடி கொடுத்ததுபோல இருக்கிறது. அரசனுக்கு மான உணர்ச்சி எழுகிறது. அவன் கண்கள் சிவக்கின்றன. தன் வேலைப் பார்க்கிருன்; படைத் தலைவர் களைச் சிறும் புலி நோக்குவது போலப் பார்க்கிறன். அப்போதுதான் அங்கே சில வீரர்கள் அடுப்பு முட்டி உணவு சமைக்க ஏற்பாடு செய்கிருங்கள். முரசொலி அவர்கள் காதில் விழுகிறது. அரசன் கண்களில் கனல் கொப்புளிப்பதையும் பார்க்கிருர்கள். அவ்வளவுதான். அவர்களுடைய மானமும் கொழுந்துவிடத் தொடங்கு கிறது. சமையல் செய்யும் பாத்திரங்களேயும் அகப்பைகளே யும் கரண்டிகளையும் அப்படியே வீசி மதிலுக்குள் எறி கிருர்கள்; "இனிமேல் மதிலுக்குள் புகுந்து மாலேயில் அங்கே சமையல் செய்து சாப்பிடுவோம்' என்று உறுதி பூணுகிருர்கள். -

கால் முரசம் மதில் இயம்பக் கண்கனன்று

விறல்வெய்யோன் நோக்குதலும்-மால் அடுகம் அடிசில்என்று அம்மதிலுள் இட்டார் தொடுகழலார் மூழை துடுப்பு.' (மதில் இயம்ப-மதிலுக்குள் ஒலிக்க. வேல-தன் கையில் உள்ள வேலாயுதத்தை. விறல் வெய்யோன். வெற்றியை விரும்பும் அரசன். அடுகம் அடி சில்-சோறு சமைப்போம். தொடு கழலார்-வீர கண்டையை அணிந்த வீரர்கள். மூழை-அகப்பை தொடுகழலார் மதிலுள் இட்டார்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/75&oldid=648043" இலிருந்து மீள்விக்கப்பட்டது