பக்கம்:வீரர் உலகம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வீரர் உலகம்

கலங்கிள்ளிக்கு அவன் செயல் தெரிய வந்தது. உடனே ஒரு சிறு படையை அனுப்பிக் கோட்டையை முற்றுகையிடச் செய்தான். கோட்டைக் கதவை உடைக் காமல், மதிலுக்குச் சேதம் ஏதும் நேராமல், கோட்டைக்கு வெளியே படைகளே நிற்கும்படிமட்டும் ஏவின்ை. தன் கோட்டை பிறன் கையில் அகப்பட்டிருந்தாலும் அதனே அழிக்க அவனுக்கு மனம் வரவில்லை. சில காலம் மதிலின் புறத்தே படை பாதுகாப்பாக இருந்தால் உள்ளே உள்ளவர்கள் உணவுக்கு வழியில்லாமல் திண்டாடும்படி நேரும். அப்போது உள்ளே புகுந்திருந்தவன் தானே கதவைத் திறந்து கொண்டு சமாதானத்துக்கு வந்து விடுவான் என்று நலங்கிள்ளி எண்ணினன். ஆளுல் நெடுங்கிள்ளி அவ்வாறு செய்யவில்லை. உள் இருந்த படியே தன் வீரர்களே வெளியிலே உள்ள படையின் மீது அம்பை எய்யச் செய்தான்; ஆயுதங்களே வீசச் செய்தான். அவற்றினின்றும் தங்களேப் பாதுகாத்துக் கொள்ளும் கவசங்களும் கேடயங்களும் புறத்தில் இருந்த படைவீரர்களிடம் இருந்தன. ஆகையால் உள்ளே இருந்து வரும் ஆயுதங்களுக்கு அவர்கள் அஞ்சவில்லே.

தங்கள் ஆயுதங்களால் ஒன்றும் பயன் இல்லாதது கண்டு உள்ளே இருந்த வீரர்கள் சும்மா இருந்துவிட் டார்கள். வெளியில் நலங்கிள்ளியின் படை பாளேயம் இறங்கியிருந்தது. நாளாக ஆக உள்ளே உணவில்லாப் பஞ்சம் தலைகாட்டியது. முரட்டுப் பிடிவாதமாக நெடுங் கிள்ளி இருப்பதனால் மதிலுக்குள் இருக்கும் மக்களுக்குத் துன்பம் உண்டாகும் என்பதை நலங்கிள்ளி உணர்ந்தான். தம் அவைக்களப் புலவராகிய கோவூர்கிழாரை உள்ளே போய்த் தூது சொல்ல அனுப்பின்ை. பயத்தினல் அனுப்ப வில்லை; கருணேயினல் அனுப்பினன்.

புலவர் உள்ளே சென்ருர். அவர் வருவதை ஒர் ஒலையில் எழுதி அம்பிலே கோத்து உள்ளே விழச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/77&oldid=648045" இலிருந்து மீள்விக்கப்பட்டது