பக்கம்:வீரர் உலகம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வீரர் உலகம்

ஊட்டுவதற்குப் போதிய பால் அவர்களிடம் இல்லே. அந்தக் குழந்தைகள் பசியினல் அலறுவது உன் காதில் விழவில்லையா?”

நெடுங்கிள்ளியின் முகத்தில் வாட்டம் உண்டாயிற்று. அவன் கோபம் கொள்ளவில்லை. இந்த அவலக் காட்சி களே நாள்தோறும் பார்க்கிறவன்தானே அவன்?

'மங்கலமுள்ள அந்த மங்கையர் கிலே எப்படி இருக் கிறது? அவர்கள் நன்ருக வாழும்போது வேளேக்கு ஒரு பூவை முடித்துக் கொள்கிறவர்கள். இப்போது கணவன்மார் அருகில் இருக்கவும் பூ இல்லாமல் வெறும் கூந்தலே முடித்துக் கொள்கிருர்கள். திருமகள் விலாசம் நிரம்பி கிற்க வேண்டிய இடத்தில் இந்தக் காட்சியைக் காண்கிறேன். மக்களுக்கோ போதிய உணவு இல்லை. குடிக்க நல்ல தண்ணிர் கிடைக்கவில்லை. இவற்றை யெல்லாம் நீ பார்க்கிருயா, இல்லையா? இது உன் ஆண்மைக்கு அழகா? அறந்தான் ஆகுமா?"

நெடுங்கிள்ளியின் உள்ளத்தைப் புலவரின் சொல் லம்புகள் துளேத்தன. அவன் அழாக்குறையாகக் கோவூர் கிழாரைப் பார்த்தான்; தாங்கள் என்னே என்ன செய்யச் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டான். இந்தச் சந்தர்ப் பத்தை எதிர்பார்த்திருந்த புலவர் தம் அறிவுரையை உடனே சொல்லலார்ை.

'நீ இப்போது இரண்டு காரியங்கள் செய்யலாம். ஒன்று அறச்செயல்; மற்ருென்று ஆண்மைச் செயல். அறத்தைக் கருதியைானல் கோட்டைக் கதவைத் திறந்து, இது உன் கோட்டை' என்று சொல்லிச் சமாதானம் செய்துகொள்வது நல்லது. ஆண்மையைக் கருதியைானல் கோட்டையைத் திறந்து வெளியிலே வந்து எதிர்த்துப் போர் செய்வது முறை. கோட்டைக் கதவை அடைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/79&oldid=648047" இலிருந்து மீள்விக்கப்பட்டது