பக்கம்:வீரர் உலகம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. வீரர் உலகம்

சில சமயங்களில் உள்ளே இருப்பவனுக்கு கண்ப கிைய அரசன் அவனுக்குத் துணையாகப் படையுடன் வருவதுண்டு.

மதிலே அழித்த அரசன் அதற்குள் கழுதையை விட்டு ஒட்டுகிருன். சோழியையும் வேல முள்ளேயும் தூவுகிருன். "கழுதையேரால் உழுது உண்ணு வரகையும் கொள்ளேயும் விதைத்தான் என்று இதைப் புலவர்கள் பாடுவார்கள். வரகு என்பது சோழியை, கொள் என்றது முள்ளே.

"எழுதெழில் மாடத்து இடனெலாம் நூாறிக்

கழுதைஏர் கையொளிர்வேல் கோலா - உழுததற்பின் வெள்வரகு கொள்வித் திடினும் விளியாதால் கள்விரவு தாரான் கதம்,'

(சித்திரங்களே எழுதிய அழகிய மாடங்களின் இடங் க்ளையெல்லாம் இடித்துக் கழுதையே ஏராகவும் கையில்' விள்ங்கும் வேலே கோலாகவும் உழுது அதன்பிறகு சோழியையும் வேல முள்ளேயும் விதைத்தாலும், தேன். கலந்த மாலையையுடைய அரசனது கோபம் போகவில்லை. நூறி-அழித்து. விளியாது-போகாது. கதம்-கோபம்.

இது உழுது வித்திடுதல் என்னும் புறத்துறை.

மதிலேக் கைக்கொண்ட வேந்தன் தன் கை வாளுக்கு நீராட்டி அதற்குப் பூசை இடச் செய்கிருன். அதில் வெற்றி தரும் கடவுளாகிய கொற்றவையை ஆவாகனம் செய்து வழிபடுகிருன். தானும் அங்கே வெற்றி ரோட்டை கடத்து கிருன். இதுவரையில் பிறர் கையில் அகப்படாத அந்த மதிலென்னும் குமரியைக் கைப்பற்றி நீராடியதல்ை இதனே மண்ணு மங்கலம் என்பர் புலவர். பகையரச னுடைய மதிலாகிய குமரியோடும் திருமணம் பொருந்திய சிறப்பைச் சொல்லுவது இந்தத் துறை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/81&oldid=648049" இலிருந்து மீள்விக்கப்பட்டது