பக்கம்:வீரர் உலகம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. முற்றுகை வெற்றி 75

'வணங்காதார் மதிற்குமரி யொடு மணங்கூடிய மலிபுரைத்தன்று' என்பது இதன் இலக்கணம்.

மதிலுக்குள் இருந்த அரசனுடைய மகளே வேட்டு வேறு அரசன் எதிர்த்து வந்து மதிலே முற்றுகையிடுவதும் உண்டு. பாரி மகளிரை விரும்பிய சேர சோழ பாண்டி யர்களுக்கு அவன் தன் மகளிரைக் கொடுக்க மறுத்தான். அது காரணமாக அந்த மூன்று மன்னர்களும் சேர்ந்து பாரியின் பறம்பு மலையை முற்றுகையிட்டார்கள். • ,

உள்ளே இருக்கும் அரசன் தன் வலியின்மையை உணர்ந்து முற்றுகையிட்ட வேந்தனைப் பணிந்து திறை களே அளிப்பதும், அவற்றைப் பெற்றுக்கொண்டு சினம் ஆறி எதிர்த்து வந்த அரசன் தன் நாடு திரும்புவதும் உண்டு. -

மதிலக் கைக்கொண்டு தன் அதிகாரியை அங்கே வைத்துவிட்டுச் செல்லாமல் அரசன் சில காலம் அங்கே தங்குகிறன். பகைவரைச் சார்ந்தவர்கள் திடீரென்று எங்கிருந்தாவது வந்து எதிர்க்கக்கூடுமாதலின் இவ்வாறு செய்கிருன். தன் படைகளேயெல்லாம் வருவித்து வீரர் களுக்கு ஏற்ற வகையில் தனித்தனியே சிறப்புச் செய் கிருன். அரசனுடைய அன்பையும் ஆண்மையையும் கண்டு வியந்து அவ்வீரர்கள் தமக்குச் செய்த சிறப்புக்களை ஏற்றுக்கொள்கிருர்கள்.

வேறு மதில்களில் உள்ள பகையரசர்கள் இந்த உறுதி யான மதில் இவ்வரசனுக்கு உரிமையானதைக் கண்டு தம்மால் இனி ஒன்றும் செய்ய இயலாது என்று அஞ்சு கிருர்கள். இனி இவனைப் பணிந்து வாழ்வதையல்லாமல் வேறு காரியம் இல்லே' என்று உணர்ந்து யாவரும் தம் மதிலே விட்டு வந்து, வெற்றி பெற்ற அரசன் தாளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/82&oldid=648050" இலிருந்து மீள்விக்கப்பட்டது