பக்கம்:வீரர் உலகம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மதில் காவல் போர்

மதிலை வேற்று அரசன் முற்றுகை இடும்போது அந்த மதிலையுடைய வேந்தன் பல வகையாலும் மதிலேக் காப்பாற்றிப் பகைவேந்தனேப் புறங்காட்டி ஒடச் செய்து விடுவான். அயலிடத்திலிருந்து வந்து பொரும் வேந்த லுடைய நிலையைவிடக் கோட்டை கொத்தளங்களுடன் இருக்கும் வேந்தன் கிலே மிக்க பாதுகாப்பை உடையது. முற்றுகையிடும் வேந்தின் மிகப் பெரிய படையும் சிறந்த படைக்கலங்களும் உடையவனுக இருந்தால்தான் ஒரு கோட்டையை முற்றுகை இடமுடியும்.

பழங்காலத்தில் அரசர்கள் தங்கள் இராசதானி நகரில் கோட்டையை அமைத்துப் பகைவரால் ஊறுபாடு நேராமல் காவல் செய்து விந்தனர். பிற்காலத்து மன்னர் களும் கோட்டை கொத்தளங்களேக் கட்டித் தம் நகரங் களைக் காத்து வந்தார்கள். சில நகரங்களில் இன்றும் கோட்டைகள் இருப்பதைப்பார்க்கலாம், இராசதானி நகர் மட்டுமன்றி வேறு முக்கிய இடங்களிலும் குன்றுகளிலும் அரசர் கோட்டைகளைக் கட்டியிருக்கிருர்கள். எப்போதும் தலைநகரிலேயே அரசன் இருப்பான் என்று சொல்வதற் கில்லை. தன் காட்டில் உள்ள இடங்கள் பலவற்றிற்கும் சென்று சென்று பார்த்து வருவதும் குடிமக்களுடைய குறைகளை அறிந்து ஆவன செய்வதும் அரசனுக்கு இயல்பு. சில சமயங்களில் வேறு நகர்களில் சில காலம் தங்குவதும் உண்டு. அவ்வாறு தங்கும் இடங்களில், கோட்டைகளேக் கட்டிக்கொண்டான். .... - و

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/84&oldid=648052" இலிருந்து மீள்விக்கப்பட்டது