பக்கம்:வீரர் உலகம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மதில் காவல் போர் 81

படைகளேயெல்லாம் மலேயின்மேல் ஏற்றுவதென்பது கடவாத காரியம். ஆதலின் கீழ் இருந்தபடியே மதிலே நோக்கி அம்பை எய்துகொண்டிருந்தார்கள். அப்படிச் செய்வதல்ை யாதொரு பயனும் இல்லே என்று அவர் களுக்குத் தோன்றியது. 'மலேயைச் சுற்றிலும் படைகளே நிறுத்தி வைத்தால் கீழேயிருந்து யாரும் போகமுடியாது. மேலே உள்ளவர்களுக்குக் கீழிருந்துதானே உணவுப் பண்டங்கள் போகவேண்டும்? சில நாட்கள் ஒன்றுமே செய்யாமல் கீழே வளைத்திருந்தால் கடைசியில் பாரி சமாதானத்துக்கு வந்துவிடுவான்’ என்று அவர்கள் எண்ணினர்கள். குன்றின்மேல் உள்ள வளத்தை அவர்கள் அறியவில்லை.

மேலே பாரியினுடன் அவனுடைய அவைக்களப் புலவராகிய கபிலர் இருந்தார். பல நாட்கள் முற்றுகை யிட்டுச் சும்மா இருந்தாலே மேலே இருப்பவர்களைப் பட்டினி போட்டுக் கொன்றுவிடலாம் என்ற பைத்தியக் கார எண்ணம் மூவேந்தர்களுக்கு இருப்பதை அவர் உணர்ந்துகொண்டார். தங்களிடம் உள்ள வளத்தைப் பகைவர் உணரட்டும் என்று எண்ணி ஒரு பாட்டை ஒலயில் எழுதிக் கீழே உள்ளவர்கள் தெரிந்துகொள் ளும்படி ஒர் அம்பிலே கோத்து அதை அனுப்பச் செய்தார்.

அவர் அந்தப் பாட்டில் சொல்லியிருந்தது இதுதான்: "இந்தப் பாரியினது பறம்பு நீங்கள் கினேக்கிறபடி அவ்வளவு எளிய மலே அன்று. முரசை அடித்து ஆரவாரம் செய்துகொண்டு மூன்று முடி மன்னர்களும் வந்திருக் கிறீர்கள். நீங்கள் மூன்று பேரும் எவ்வளவு நாளேக்கு முற்றுகையிட்டாலும் எங்களுக்குக் கவலை இல்லை. எங்க ளுக்கு உணவுப் பஞ்சம் இல்லை. உழவர்கள் உழாமலே, உண்ணும் பொருள்கள் நான்கு எங்களுக்குக் கிடைக் கின்றன. உழவர்கள் உழுது பயிர் செய்துதான் நெல்

- வீ. உல-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/88&oldid=648056" இலிருந்து மீள்விக்கப்பட்டது