பக்கம்:வீரர் உலகம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மதில் காவல் போர் 83

நீங்கள் வந்து ஆடிப் பாடி நின்ருல் பாரி தன் மலே மாத்திரமா, தன் நாட்டையும் சேர்த்துத் தந்துவிடுவான்.'

இவ்வாறு பொருள்படும்படி அந்தப் பாடல் இருந்தது. அதில் உழவர் உழாத நான்கு பண்டங்களைச் சொல்லும்

பகுதி இது:

"உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே;

ஒன்றே, சிறியில் வெதிரின் நெல்விளை யும்மே; இரண்டே, தீஞ்சுளேப் பலவின் பழம் ஊழ்க் கும்மே; மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே; நான்கே, அணிநிற ஒரி பாய்தலின் மீதழிந்து திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே."

(பயன்-உண்ணும் பொருள். வெதிர்-மூங்கில். தீஞ்சுனே-இனிய சுனே. ஊழ்க்கும்-உதிர்க்கும். வீழ்க்கும்பூமிக்கு அடியில் விளையச் செய்திருக்கும். ஒரி-முதிர்ந்த போது உண்டாகும் நிறம்.)

இந்தப் பாட்டில் கபிலர் அகத்தோன் செல்வத்தை மிக நன்ருகச் சொல்லியிருக்கிரு.ர்.

போரில் முன்சென்ற வீரர்கள் சிறிதே தளர்ச்சி அடைகிரு.ர்கள். அதனே அறிந்து புதிய பட்ைகளே அவர் களுக்குத் துணையாக அனுப்பிப் புதிய ஊக்கத்தை உண்டாக்குகிருன் அரசன்.

முற்றுகையிடும் அரசன் மதிலுள் இருக்கும் மறவர் மகள் ஒருத்தியைக் கல்யாணம் செய்து தந்தால் முற்றுகையை விட்டு விடுவதாகச் சொல்லி ஒரு தூதுவன அனுப்புவான். அப்போது அந்த மறவர்களுக்கு வரும் கோபத்தைப் பார்க்க வேண்டுமே! மக்ள் மறுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/90&oldid=648058" இலிருந்து மீள்விக்கப்பட்டது