பக்கம்:வீரர் உலகம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 - வீரர் உலகம்

மொழித்ல் என்று இந்தத் துறைக்குப் பெயர் சொல் 'வார்கள். .

மறவர்கள் வந்த தூதுவனேப் பார்த்துப் பேசு கிருர்கள். தம்பி, நல்ல செய்தி கொண்டு வந்தாய் .ே எங்கள் பெண்ணை மணம் பேசியா விட்டான் உங்கள் முட்டாள் அரசன்? இங்கே பார் இந்தக் கட்டிலே. இது தான் அந்தப் பெண் படுத்து உறங்குவது. இதன் கால் கரேப் பார்த்தாயா? எல்லாம் யானேத் தந்தத்தால் செய்தவை. உங்கள் மன்னனைப் போலப் பலர் இவளேக் கட்டிக் கொள்ளவேண்டுமென்று வந்தார்கள். போர் செய் தார்கள். யானைப் படையுடன் வந்தார்கள். அவர்களே அடித்து ஒட்டினேம். யானேகளைக் கொன்ருேம். அவற்றின் தந்தங்களைக் கொண்டுதான் இந்தக் கட்டில் கால்களேச் செய்தோம். தெரிகிறதா? போ; உங்கள் அரசனிடம் போய்ச் சொல்' என்கிரு.ர்கள்.

ஒள்வாள் மறவர் உருத்தெழுந்து உம்பர்நாள் கன்வார் நறுங்கோதை காரணமாக்-கொள்வான் மருங்கெண்ணி வந்தார் மழகளிற்றின் கோடுஇக் கருங்கண்ணி வெண்கட்டிற் கால்.”

(உருத்து-கோபித்து. உம்பர்நாள்-முன்காளில், நறுங் கோதை என்றது மறக்குலப் பெண்ணே. கருங்கண்ணி. கரிய கண்ணையுடைய பெண்.) . : - @ಮೆಮrD அரசர் பெண் Gమిarl விடுக்கும் தூதரிடம் சினந்து மறவர் பேசும் பேச்சைத் தமிழில் உள்ள கலம்பகத்தில் மறம் என்ற துறையாக வைத்துப் பாடி யிருக்கிருர்கள் புலவர்கள்.

திருவரங்கக் கலம்பகத்தில் வரும் மறத்தை இங்கே

iபர்ர் க்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/91&oldid=648059" இலிருந்து மீள்விக்கப்பட்டது