பக்கம்:வீரர் உலகம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மதில் காவல் போர் இ5'

திருவரங்கப் பெருமாளிடம் பக்தி பூண்ட மறவர் குலம் அது. அந்தக் குலத்துப் பெண்ணேக் கேட்டு ஒரு மன்னன் ஒலயுடன் தூதனே அனுப்பியிருந்தான். தூதன் ஒலயைக் காட்டிச் செய்தியையும் சொன்னன். அந்த மறவன் ஒலையைப் படிக்கவில்லை; படிக்கத் தெரியாதவன். அவன் நல்ல ஒலயில் செல்லரித்தாற்போல எதையோ கிறுக்கி யிருக்கிருன் என்று இழிவாக எண்ணிக் கொண்டான். சினம் பொங்கத் தூதுவனப் பார்த்துப் பேசுகிருன்.

'மணம் பேச வந்த தூதா, இந்த ஒலே எதற்கு ஆகும்? இது செல் அரித்த ஒலையல்லவா? இது செல்லுமா? எங்க ளுக்கு வேண்டிய பெரிய வரங்களேயெல்லாம் அருளு கிறவர் திருவரங்கர். நப்பின்னேயின் கணவராகிய அவருடைய திருவடியிலே அன்பு வைத்த மறவர்கள் நாங்கள். எங்கள் பெண்ணினிடம் ஆசை வைத்து வந்த மன்னர்கள் பட்ட பாட்டைப் பார்க்கிருயா? எங்கள் ஊருக் குள்ளே வந்து பார். வீடுகளில் வாசலுக்கு இடும் படல் எது தெரியுமா? அந்த மன்னர்கள் பிடித்துக்கொண்டு வந்த குடைகளேயெல்லாம் படல்களாகக் கட்டியிருக் கிருேம். நாங்கள் தினையளக்கிற மரக்காலும் படியும் அவர்கள் மகுடங்கள். பெரிய மகுடமாக இருந்தால் மரக் காலாகவும், சிறியதாக இருந்தால் படியாகவும் வைத்து அளக்கிருேம். எங்கள் குடிசைகளில் கட்டுவதற்குக் கற்றைார் அவர்கள் வீசிவந்த சாமரங்கள். வீட்டில் சுற்றிலும் வேலி இட்டிருப்பவை, அவர்கள் தோற்றுக் கீழே போட்டு ஒடிப்போன வில்லும் வாளும் வேலுமே.”

'பேசவந்த துரதசெல் அரித்தஓலை செல்லுமோ?

பெருவரங்கள் அருள் அரங்கர் பின்னகேள்வர் தாளிலே பாசம்வைத்த மறவர்பெண்ணே நேசம்வைத்து முன்னமே பட்டமன்னர் பட்டதெங்கன் பதிபுகுந்து பாரடா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/92&oldid=648060" இலிருந்து மீள்விக்கப்பட்டது