பக்கம்:வீரர் உலகம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. போர்க்களத்தில்....

- பிறருடைய நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையோடு போர் புரிய எழுவது ஒரு வகை தம்முடைய வீரத்தை நிலைநாட்டுவதற்குப் போர் புரிவது மற்ருெரு வகை. இந்த இரண்டையும் வெவ்வேறு திணையாக வகுத் துச் சொல்கிருர் தொல்காப்பியர். பிறர் மண்ணின்மேல் நசையையுடைய வேந்தன் செய்யும் போரை வஞ்சித் திணையாக அமைத்தார். வீரம் கருதிப் போர் செய்வதைத் தும்பைத் திணையாக வகுத்தார். நாடாசையை வளர்க் காமல் வீர உணர்ச்சியை வளர்ப்பதே சிறந்தது என்பது பழங்கால மன்னர் கொள்கை. தம்முடைய வீரத்துக்கு இழுக்கு வருமால்ை உடனே சீறி எழுவார்கள்.

"மைந்து பொருளாக வந்த வேந்தனச்

சென்று தகியழிக்கும் சிறப்பிற்று என்ப’’

என்று தும்பையின் இலக்கணத்தைத் தொல்காப்பியம் சொல்கிறது. தனது வலியினை உலகம் மீக்கூறுதலே தனக்குப் பெறு பொருளாகக் கருதி மேற்சென்ற வேந்தன அங்ங்னம் மாற்று வேந்தனும் அவன் கருதிய மைந்தே தான் பெறுபொருளாக எதிர்சென்று, அவனைத் தலைமை தீர்க்கும் சிறப்பினையுடைத்து, அத் தும்பைத்திணை என்று சொல்லுவர் ஆசிரியர்' என்பது இச் சூத்திரத்திற்கு நச்சி ஞர்க்கினியர் எழுதிய உரை. இரு வேந்தரும் தங்கள் தங்கள் வீரத்தை நிலைநாட்டப் போர்செய்வார்கள்.

புறப்பொருள் வெண்பா மா?ல, அதிரப் பொருவது தும்பை என்று சொல்லும். இந்த இரண்டு வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/94&oldid=648062" இலிருந்து மீள்விக்கப்பட்டது