பக்கம்:வீரர் உலகம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. போர்க் களத்தில் 89

மாட்டான். நாங்கள் ஏந்திய வாளே வெற்றி பெற்ருலன்றி உறையினில் இடமாட்டோம்' என்று தானே வீரர்கள் தம் மறத்தைக் காட்டப் புகுகிறர்கள். முதியவர் எவரேனும் படைகளுக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என்று இரங் கில்ை, "எங்களுக்காக இரங்க வேண்டாம். உண்மையில் உங்களுக்கு இரக்கம் உண்டானுல், நாங்கள் யாரை எதிர்த்துச் செல்லப் போகிருேமோ, அவர்களுக்காக இரங்குங்கள். நம்முடைய அரசன் இந்தப் படையை கடத்திச் செல்லும்போது பகைவர் படை என்ன ஆகுமோ என்று இரங்குங்கள். பெரிய தேர்களும், பரிகளும், யானைகளும், வீரர்களும் உள்ள அந்தச் சேனையின் தலைவிதியை எண்ணி இரங்கிலுைம் பொருள் உண்டு” என்று பேசுகிரு.ர்கள்.

போருக்குப் புறப்பட்ட படைகளின் சிறப்பை எப்படி வருணிப்பது! வேந்தனுடைய யானேக்கு எத்தனை அறிவு அது இப்போது போர்க்களத்தில் புகுந்து பகைவர்களைச் சாடப்போகும் மிடுக்குடன் கிற்கிறது. அதன் கண்கள் கனலேக் கொப்புளிக்கின்றன. அது போர்க்களத்தில் புகுந்து உழக்கில்ை எத்தனே பேர் பட்டு விழுவார்கள்! இதை எதிர்பார்த்து அந்த மதகளிற்றைத் தொடர்ந்து சென்று போர்க்களத்தில் விருந்துணவு பெறும் ஆர்வத் தில்ை பேய்களும் கழுகுகளும் கூற்றுவனும் அதன் பின்னே செல்கின்றனவாம்.

'அடக்கருந் தானே அலங்குதார் மன்னர்

விடக்கும் உயிரும் மிசையக்-கடற்படையுள் பேயும் எருவையும் கூற்றும்தன் பின்படரக் காயும் கழலான் களிறு.”

(விலக்குதற்கு அரியசேன, அவற்றையுடைய அரசர் ஆகியோருடைய தசையையும் உயிரையும் உண்ணுவதற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/96&oldid=648064" இலிருந்து மீள்விக்கப்பட்டது