பக்கம்:வீரர் உலகம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வீரர் உலகம்

காக, கடல் போன்ற சேனேக்குள்ளே பேயும் கழுகும் கூற்றுவனும் தன்னைப் பின்பற்றி வர, வீரக் கழலேயுடைய வேந்தனது களிறு சீறும்.)

களிற்றின் நிலை இது. குதிரையோ அம்புபோல் வேக மாகத் தாவி வருகிறது, சேனையில் முன்னணியாக உள்ள படைக்குத் தார் என்றும், தூசி என்றும் பெயர். பல வீரர்கள் தாம் தாமே முன்னணியில் சேர்ந்து பொர வேண்டும் என்று முந்துகிறர்கள். ஒர் அரசனேப் பல அரசர்கள் பகைப்படையில் கின்று எதிர்த்தாலும் தானே தனி நின்று தன் அரசனேப் பாதுகாக்கும் மாவீரனும் இந்தப் படையில் இருக்கிருன்.

இவ்வாறு எழுந்த படை போர் செய்கிறது. மறவரும் மறவரும் முட்டுகின்றனர். அந்தப் போரில் பலர் வீழ் கிருர்கள். அவர்களுக்காக இரங்கிப் பாணர்கள் விளரிப் பண்ணில் இரங்கற் பாடல்களைப் பாடுகிறர்கள். விளரி இரங்குவதற்கென்றே அமைந்த பண். சில சமயங்களில் இரண்டு கட்சிக்கும் தலைவர்களாக உள்ள இரண்டு மன்னர்களும் போரில் சாய்ந்து விடுவதுண்டு. இருவரும் தபு நிலை என்ற துறையாக அதை அமைத்துச் சொல் வார்கள். <

போர் நடைபெறும்போது ஒரு கட்சியினர் வலி குன்றி மெல்ல நழுவத் தொடங்குகிருர்கள். அதைக் கண்டு அப்படையில் உள்ள வீரன் ஒருவனுக்கு உள்ளம் துடிக் கிறது. ஒடும் படையினைத் துரத்திக்கொண்டு பகை வர்கள் வருகிருர்கள். அப்போது படையின் கடைசியில் இருந்த இந்த வீரன் திடீரென்று திரும்பி கின்று, துரத்தி வரும் படையை எதிர்க்கிருன். வேறு ஒருவன் யானையைத் த்ன் கைவேலினல் எறிகிருன். x,谷 、

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/97&oldid=648065" இலிருந்து மீள்விக்கப்பட்டது