பக்கம்:வீரர் உலகம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. போர்க் களத்தில் 91

பகைவர்கள் போர்க்களத்தில் படுகின்றனர். தன் கை வேலால் பல களிறுகளே மாய்த்துப் பல வீரர்களின் மார்புகளேத் திறந்து வெற்றி பெற்று அவ்வேலைப் பெரு மிதத்துடன் வீரன் ஏந்தியிருக்கிருன். இப்போது அதற்கு வேலே இல்லை. அவன் அதைச் சுழற்றிக்கொண்டு ஆடுகிருன். வேறு ஒரு வீரன் செய்வது பெரு வியப்பை உண்டாக்குகிறது. அவன் தன் மார்பிலே ஊடுருவிய வேலேயே பறித்துப் போர் புரிய முற்படுகிருன். இப்படி வரும் காட்சி ஒன்றைத் திருக்குறளில் காணலாம்.

தன் கையில் வேலுடன் இடசாரி வலசாரியாகத்' திரிந்துகொண்டிருக்கிருன் ஒரு வீரன். வேலினல் களிற்றை வீழ்த்துதல் பெரு வீரம்.

'ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.” என்று புறநானூறு சொல்கிறது. இந்த வீரன் ஒரு களிற் நின்மேல் தன் வேலே எறிகிருன். அது பிளிறிக்கொண்டு எங்கோ ஒடிச் சென்று விழுகிறது. அதைத் தேடிச் சென்று வேலேப் பறிப்பது இந்தப் பெருஞ் சேனையினிடையே நிற்ப வனுக்கு இயலுமா? இப்போது இவன் கையில் ஆயுதம் இல்லாமல் இருக்கிருன். சிறிது நேரத்துக்கு முன்தான் இவன்மேல் பகை வீரன் தன் வேலே வீச அது இவன் மார்பில் தைத்து கிற்கிறது. களிற்றை வீழ்த்தும் வேகத் தில் அந்த வேலை இவன் சட்டை செய்யவில்லே. இப்போது கை வேலை யானேயின்மேல் வீசிவிட்டு வெறுங் கையோடு கிற்கும்போது சற்றே தலையைக் குனிகிருன். தன் மார்பிலே பகைவன் பதித்த வேல் இவன் கண்ணிலே படுகிறது. இவனுக்கு மகிழ்ச்சி பொங்குகிறது. சட்டென்று அதைப் பறித்துக் கையில் எடுத்துக்கொண்டு புன்முறுவல் பூக் கிருன். இப்போது இவனுக்கு ஒரு வேல் கிடைத்துவிட்ட தல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/98&oldid=648066" இலிருந்து மீள்விக்கப்பட்டது