பக்கம்:வீரர் உலகம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. வீரர் உலகம்

"கைவேல்களிற்ருெடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும்'

என்பது இந்த வீரக் காட்சியைக் காட்டும் குறள்.

அரசன் வெற்றிமேல் வெற்றியாகப் பெற்றுத் தேரின் மேல் ஏறிச் செல்கிருன். வீரர்களுக்கு உண்டாகும் உவகை சொல்லத் தரம் அன்று. அவர்கள் கூட்டமாகக் கூடிக்கொண்டு அரசனுடைய தேருக்குமுன் ஆரவாரம் செய்து கூத்தாடுகிருர்கள். தேருக்குப் பின்னலும் ஆரவாரந்தான். அங்கே வீரர்களோடு ஆடலில் வல்ல விறலியரும் சேர்ந்து ஆடுகிருர்கள்.

போர்க்களத்தில் இதுவரையில் கிடைக்காத பெரு விருந்து தங்களுக்குக் கிடைத்ததென்ற மகிழ்ச்சியில் தேருக்கு முன்னும் பின்னும் பேய்கள் கைகோத்துக் கொண்டு ஆடுவதாகச் சொல்லுவது ஒரு மரபு. அந்தத் துறையைப் பேய்க்குரவை என்று சொல்வார்கள்.

போர்க்களத்திற்குள் புகுந்து பார்த்தால் எத்தனே

விதமான காட்சிகளைக் காணுகிருேம்! இதோ ஒரு வீரன் ஒரு களிற்றின்மேல் தன் வேலை வீசி விழச் செய்தான். அதே சமயத்தில் பகைவருடைய அம்பும் அவன் மார்பைத் துளேத்தது. அந்த யானே விழ அதன் கீழே அவன் விழுந்து கிடக்கிருன். - *

இதோ ஒரு பக்கம் வாள் வீரர்கள் ஆடுகிருர்கள். தங்கள் படைத் தலைவனுடன் சேர்ந்து வெற்றி பெற்ற மகிழ்ச்சியினல் அவர்கள் ஆடுகிருர்கள். இரு பெரும் படைக்கும் நடுவில் அஞ்சாமல் துளணேப்போல் கின்ற வீரன் ஒருவனே ஓரிடத்தில் காண்கிருேம்.

இதோ ஒரு வீரன் போர்க்களத்தில் வீழ்ந்து கிடக் கிருன். அவன் உடம்பு கிலத்திலே படவில்லை. உடம்பெல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/99&oldid=648067" இலிருந்து மீள்விக்கப்பட்டது