பக்கம்:வீர காவியம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

100




இயல் 44
மணிவயிற்றில் வளர்மகவு ஆணே என்று
மாவேழன் கற்பனைத்தேர் ஊர்ந்து சென்ருன்.
பிறந்தவுடன் அவனையிரு கையால் வாரிப்
பெட்புடன் நான் வழங்கிடுவேன் முத்த மாரி; திறந்தஎன தகல்மார்போ டனைத்துச் சென்று
சீரிய என் போர்க்களத்திற் கிடத்தி, மண்ணிற் பிறந்தவனே! இம்மண்ணே உனக்கு வாழ்வு:
பெருவீரங் காட்டியிதைக் காத்தல் வேண்டும்; இறந்தாலும் களத்தே தான் இறத்தல் வேண்டும்;
எனவாழ்த் தி வீரத்தை ஊட்டிக் காப்பேன். 189
மரத்தாற்செய் சிறுதேரும் குதிரை யானை
வகைகளுடன் விளையாடத் தருவேன்; மேலும் உரத்தால்வெம் புலியோடும் சிங்கத் தோடும்
உடன்றுபொரச் சிறுவேலும் வாளும் ஈவேன்; மறத்தோள்கள் திரண்டுருளும் பருவம் வந்தால்
மற்போரும் விற்போரும் வாள்சு ழற்றும் மறப்போரும் திறத்தோடு பயிற்று விப்பேன்;
மாமல்லர் போர்க்களமே பள்ளி யாகும். 190
பெட்பு-விருப்பு. பள்ளி-பள்ளிக்கூடம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/103&oldid=911160" இலிருந்து மீள்விக்கப்பட்டது