பக்கம்:வீர காவியம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

மகப்பெறு படலம்

 மகன் பிறந்த மகிழ்ச்சியினைத் தந்தை யான மா வேழற் குணர்த்துவலென் றுள்ள ங் கொண்டு மகள் வயினவ் வயத்தரசன் எடுத்து ரைத் தான்; மங்கையவள் அம்மொழிக்கு மறுப்பு ரைத்தாள்: மகனெனவே செய்திசொலி அனுப்ப வேண்டா மைந்தனென அறிந்துவிடின் முறுவல் பூத்த முகனிவனைத் தன்னகா க்கே எடுத்துச் சென்று முனைமுகத்துக் கிடத்திடுவான் போரில் வல்லான். 233 வரைந்திருத்த கொழுநரெனே வரைந்து சென்ற வாட்டமினுந் தணியவில்லை; வேர்கொண் டோங்கும அருந்துயரம் சிறிதேனும் அறுந்து போக ஆற்றுமிவன் முகங்கண்டு வாழு கின்றேன்; மருந்தனைய இவனையும் நான் பிரிந்து விட்டால் மாய்தலன்றி வேறில்லை; என்றன் வாழ்வின் குருந்தனைய மலர்முகனைச் சுமந்து பெற்ற குலமகனை எவ்வணம் நான் பிரிந்து வாழ்வேன்? 234 தன் மகனைப் பெருவீரன் ஆக்கு தற்கே தணியாத விருப்புடையான்: அதல்ை என்றும் வன்மைமிகு போர்முறையே பயிற்று விப்பான்: வளர்ந்துவிடின் இவனுமவன் போல நாளும் கொன் முறைய போர்க்களமே குடியாக் கொள் வான் : கொடியிடையாள் ஒருத்தியிவன் மனையாய் வந்தால் என்னிலைபோல் அவள் நிலையும் ஆகும்; பாவம்! என் தந்தாய் உண்மைநி ைசொல்ல வேண்டா. 235 வரைந்து-மணந்து பிரிந்து குருந்து-குருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/122&oldid=911202" இலிருந்து மீள்விக்கப்பட்டது