பக்கம்:வீர காவியம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

122


தன்னெத்த பருவத்துச் சிறுவ ரோடு தான்கலந்து மகிழ்ந்துவிளை யாடும் போதும் மின்னெத்துப் பொலிகின்ற வேலும் வாளும் வீசிஎறிந் தார்ப்பரிப்பான்; வீரங் காட்டும் சின்னத்தை விழைவதைத்தான் அன்றே அந்தச் சிறுவன் செயல் ஒவ்வொன்றும் காட்டி நிற்கும்; பொன்னெத்த உடலழகன் வலிமை யோடு புரிகின்ற அனைத்திலுமே முதன்மை கொள்வான். 240 பாய்ந்தோடும் விரைவுக்குப் புரவி தன்னைப் பாருலகம் பொருளாக எடுத்துக் காட்டும்; சாய்ந்தாடும் உளைப்பரிதான் இவனைச் சேர்ந்து தன்விரைவை வெளிப்படுத்த ஒடுங் காலை ஒய்ந்தாடும் கால் தளர்ந்தே உருண்டு விழும்; உறுகாற்றிற் கடிதேகி இவனே வெல்வான்: தோய்ந்தாடும் பருவத்துச் செயல்க ளெல்லாம் சொல்லரிய வியப்பினையே தந்து நிற்கும். 241 விளையாட்டுப் பருவமொரு சிறிதே ஏக, விறன்மிகுத்த இளங்காளைப் பருவம் வந்து முளைகாட்டி முகிழ்த்திருக்கத் தோளும் மார்பும் முகமலரும் விழியிணையும் பொலிந்து நல்ல களை கூட்டி நிற்க,உடல் தோற்றந் தானும் கட்டிளமை கொண்டிலங்கக் கோட்டு வெற்பின் முழைகாட்டும் அரியேற்றின் குட்டி போல மொய்ம்புமிகு பெருமிதமும் கொண்டு நின்ருன் 242 உள-பிடர்ம யிர் முழை-குகை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/125&oldid=911208" இலிருந்து மீள்விக்கப்பட்டது