பக்கம்:வீர காவியம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

மகப்பெறு படலம்


பழுதொன்றும் இல்லாமற் புகழே கொண்டு பாராளும் மன்னர்குலம் நீபி றந்த தொழுதகுநற் குலமாகும்; உன்றன் தந்தை தோகைஎனை வெறுத்தெங்குஞ் செல்ல வில்லை; கொழுநரவர் மனம்வெறுக்கும் வண்ணம் நானும் குற்றமொன்றும் மறந்தேனுஞ் செய்ய வில்லை; அழகுதரும் மங்கல நாண் என்க முத்தில் அணிசெய்ய வாழ்கின்ருர் பகைவர் நாட்டில். 252 தாயகத்தைக் காப்பதற்கே தனந்து சென்ருர்; தரியலர்தம் போர்முனையில் படைந டாத்தப் போயவர்க்குக் களமொன்றே நினைவில் நிற்கும் போர் முடிந்து பகை தணியும் நாளில் தோன்றும் தூயவர்க்கு நம் நினைவு நீவ யிற்றில் தோன்றிவளர் பொழுதத்தே எனப்பி ரிந்த சேயவர்க்குப் பெண்பிறந்த தென்று பொய்ம்மை செப்பியதே நான்செய்த பிழையாம்' என்ருள். 253 'ஏனம்மா பொய்ம்மொழிந்தீர்? மொழிந்த பின்னர் என்னபயன் கண்டீர்நீர்? தந்தை யின்றி நானம்மா துயர்கின்றேன்; எனக்குச் செய்த நன்மைஎனக் கொண்டீரோ? விந்தை' என்ருன்; மினம்போல் விழியுடையாள் அவனை நோக்கி மெய்ம்மொழியின் உனையங்கே அழைத்துச் செல்வார்; கானம்போல் பாலையைப்போல் என்றன் வாழ்வு காய்ந்துவிடும் என்றஞ்சிச் சொன்னேன்' என்ருள். 254 சேயவர்-தொலைவில் உள்ளவர் துயர்கின்றேன்துயரப்படுகின்றேன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/130&oldid=911220" இலிருந்து மீள்விக்கப்பட்டது