பக்கம்:வீர காவியம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

மகப்பெறு படலம்


இயல் 57 பரியினைப் பெற்ற அச் சிறியவன் விரைந்து பொருபடை திாட்டிப் போர்செய முனைந்தனன். ஆடிக்குள் காண்பார்தம் தோற்ற மெல்லாம் அவ்வாறே தோன்றுதல்போல் தந்தை சாயல், நீடிக்கும் பெருவீரம், செய்கை, பண்பு நினைவெல்லாம் அப்படியே ஒக்கின் ருனல்; தேடிக்கண் டின்புறவே தந்தை யின்பால் செலநினைந்தான்; இவனை இனித் தடுப்ப தென்ருல் மூடிக்குள் பெரும்புயலை அடக்கல் போலாம்; முயல்கஅவன் வெல்கவென மகிழ்ந்து நின்ருள். 268 பணியாளன் ஒருவனைக்கூய்த் தேர்ந்தெ டுத்த பரிபலவுங் கொணர்கவென ஆணை யிட்டாள்; அணியாக வந்தவற்றுள் ஒன்றும் இந்த அடலேற்றுக் கொப்பவிலை; மற்ருேர் வீரன் மணியான பாய்மாவொன் றங்குத் தந்து "மாவேழன் புரவிக்குப் பிறந்த தாகும்; இணையாக இதற்கொன்றும் இல்லை' என்ருன்; ஏறனையான் மகிழ்ந்ததன்மேல் ஏறிக் கொண்டான்.269 ஆடி-க ண் குடி கூய்-அழைத்து. அடலேறு-வெற்றிக்காளை போன்ற கோாரி. t =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/136&oldid=911231" இலிருந்து மீள்விக்கப்பட்டது