பக்கம்:வீர காவியம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

142

இயல் 61 வெண்ணகருட் படைபுகுந்த செய்தி கேட்ட வெண்கோடன் சினந்தெழுந்து பாய்ந்து வந்தான். பாய்புலிகள் நகருக்குட் புகுந்த காலப் பார்த்தனர்வெண் கோட்டையினை உடன்றெ ழுந்து போய்மதிலைத் தகர்க்கஎன ஓடி வந்தார்; பொன்றலர்தாம் உட்புகுந்த செய்தி கேட்டுக் காய்சினத்தன் வெண்கோடன் உருத்தெ ழுந்து கருதலரைப் பொருதலறச் செய்வேன் என்று பாய்புரவி மிசையேறிப் பாய்ந்து நாட்டுப் பற்ற தல்ை பற்ருரைப் பற்ற வந்தான். 284 பரியேறி வருவீரன் பகைமுன் னின்று பற்றலரே! என்னுடன்போர் தனித்துச் செய்ய வருவிரோ? பொருதற்கு வல்ல ராயின் வருக'வெனத் தோள்தட்டி ஆர்ப்ப ரித்தான்; அரியேறிவ் வறைகூவல் கேட்டு நின்றே அதிரவரும் மொழிபுகல்வோய்! யார் நீ? என்பால் சரியாகத் தனிநின்று பொரவல் லாயோ? தகுதுணிவும் பெறுதி.எனில் பொரவா வென்ருன். 285

6] ཞི་༡༩༩་༧n:r. கருதலர், பற்ருர்-பகைவர். பொர-போர் புரிய.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/145&oldid=911252" இலிருந்து மீள்விக்கப்பட்டது