பக்கம்:வீர காவியம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

144


இயல் 62 கோளரிக்கும் வெண்கோடன் தனக்கும் நேர்ந்த கொடும்போரில் வெண் கோடன் தோல்வி யுற்ருன். வெண்கோடன் உரைத்தவெலாம் கேட்டு நின்ற வீரமகன் வேலெடுத்தான் நகைத்தெ ழுந்தான்; கண்மூடித் திறக்குமுனம் பாய்மா வேறிக் கறங்கெனவே சுழன்றுகழன் ருர்ப்ப ரித்தான் நண்பாடும் பொழுதத்து நண்பர் போல நண்ணுரிவ் விருவருமே நகைத்து நின்று விண்ணுடும் மின்ளுெளிபோல் வேலை வீசி விளையாடிப் பொருதனர்தம் திறமே காட்டி. காலெடுத்துப் புரவிகளும் சுழலும் போது களமெங்கும் மேலெழுந்து புழுதி சூழ, வேலெடுத்து வாய் மடித்துக் கோடன் மார்பில் வீரமகன் குறிபார்த்து வீசி விட்டான்; மேலுடுத்த வன்கவசம் வாய்பி ளக்க, விரியகலத் தவ்வீட்டி தைத்த ழுந்த, வாலுகத்துச் செங்குருதி சோர வீழ்ந்தான் வாய்வீரம் பலபேசி வந்த வீரன். - - கறங்கு - காற்ருடி. நண்பாடும்பொழுது - நட்புக்கொள்ளும் அகலம்-மாாபு. வாலுகத்து-வெண் மன லில் .

  1. +

287 288 பொழுது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/147&oldid=911254" இலிருந்து மீள்விக்கப்பட்டது