பக்கம்:வீர காவியம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145

மகப்பெறு படலம்


புரண்டுவிழும் வெண்கோடன் கவச மார்பில் பொற்கழலை வைத்தழுத்தி வாளை ஒச்சி, மருண்டவன்றன் கழுத்தரிய முயலுங் காலை மனம்மயங்கி முறுவலன்றன் தாள்கள் பற்றி, வெருண்டஎன விட்டுவிடு, கொல்ல வேண்டா, வீரவுனை வேண்டுகிறேன்' என்று கெஞ்ச, "இருண்டுவிடும் உன்வாழ்வென் றஞ்சி என்னை இரக்கின்ருய் ஆதலினுல் இறக்க வேண்டா. 289 பணிவோரை ஒருநாளும் கொல்ல ஒவ்வேன்; பகைஎனினும் பிழைத்துப்போ!' என்று கூறிப் பணியாளர் தமையழைத்துக் கோடன் கையில் பற்றுவிலங் கணிவித்துக் கொண்டு செல்க! துணிவாளன் இவனைஒரு காவல் செய்க! துயரேதும் தாராமல் பேணு கென்று தணியாத திறலுடையன் ஆணை யிட்டான்; தாள் பணிந்தவ் வேவலர்தாம் கொண்டு சென்ருர். 290 பொருகளத்தில் நகர்த்தலைவன் தோல்வி கண்டான்; பொருதலர்முன் இறந்திலகுய் இர.ந்தான் என்ற அருவருக்கும் புன்மொழிகள் நகர மெங்கும் அலராகிப் பரவியது; பெண்ணும் ஆனும் 'சிறுபகைவற் காற்ருமல் தோற்றுப் போன சிரிழந்த வெண்கோடன், உயிருக் காக உறுபகைக்குப் பணிந்துவிட்டான் மான மில்லான் உலுத்த'னென ஊரெல்லாம் வெறுத்து ரைத்தார். 291 - _-_o துணிவாளன் என்றதுஎள் ளற் குறிப்பு அலர்-பழிமொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/148&oldid=911256" இலிருந்து மீள்விக்கப்பட்டது