பக்கம்:வீர காவியம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

150

 எனவுளத்துச் சிந்திப்போன் அவளை நோக்கி, 'இயம்பரிய வீரத்தின் எழில ணங்கே! தினவெடுத்த திண்டோளன் என் முன் தோற்ருய்; சிறைசெய்தேன்; என்னையினித் தப்பிச் செல்லல் கனவகத்தும் இயலாது; போரை வேட்டுக் களமுற்ருர் சிறையுறுதல் சமரிற் சாதல் எனுமிவற்றுள் ஒன்றுறுதி; அறிவாய் நீயும்; ஏன்வந்தாய் ஆய்வின்றி முனைய கத்தே? 300 அரிவைஎனப் பிறந்தனை நீ! செங்க ளத்தில் ஆடவரோ டமர்புரிதல் ஒல்வ தாமோ? உரிமைஎனக் கூறுவைநீ! ஒவ்வேன் ஒவ்வேன்; உடலமைப்பின் இயல்புணர்ந்து நடத்தல் வேண்டும்; அரியசெயல் பலசெய்தல் இயல்வ தேனும் அமர்புரிதல் முறையன்று பேதாய்' என்ருன்; புரிசமரில் பலர்முன்னர்த் தோல்வி காணப் புழுங்கினள்நெஞ் சழுங்கினளப் பூவை நல்லாள். 301

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/153&oldid=911268" இலிருந்து மீள்விக்கப்பட்டது