பக்கம்:வீர காவியம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

168


செருக்குற்றுத் தருக்குமொழி பேசி வந்த சீயத்தின் வலியானை அடர்த்துத் தாக்கி வெருக்கொண்டு வெந்காட்டி ஒடப் பண்ணும் விறலுடையார் நினையன்றி யாரோ உள்ளார்? உருக்குற்ற நின் தோளால் தாக்குற் ருங்கே உடன்றுவரும் அவ்விளைஞன் வீழ்தல் வேண்டும்; நெருக்குற்று நாடுழலும் காலை ஈங்கு நீயிருத்தல் முறையன் ரும்; எழுக வீர! 336 நாடுனது தோள்வலிமை நாடுங் காலை நமக்கென்ன எனவிருத்தல் நலமோ ஐய! கேடுளத்தில் அறியாத மன்னன் உன்னைக் கிளந்ததனை மனத்திருத்தும் நேரம் ஈதோ? ஈடுலகில் எவருமிலர் எனப்பு கழ்ந்த எம்வேழன் உயிருடனிங் கிருக்கும் போது நாடுரிமை யிழந்தடிமை யாதல் நன்ருே? நண்ணுரும் இகழ்ந்துரைக்க வாழ்தல் நன்ருே? 337 காலமினித் தாழ்த்துவிடின் கொடிய மாற்ருர் காலடியில் வீழ்ந்துவிடும் நமது நாடு; ஞாலமுனை எள்ளிநகை யாடு மன்ருே? நாளொன்று போவதெனின் நாடு பாழாம்; கோலமொடு வேலை எடு! கூற்ற மென்னக் கோலைஎடு! வாளை எடு! கவசம் தாங்கு! வாலமொடு வருவோனைத் தொலைக்க வாவா! வாளுக்குந் தோளுக்கும் விருந்து கிட்டும்.' 338 சியம்-சிங்கம். வெந்காட்டி-முதுகுகாட்டி, விறல்-வலிமை. கிளந்ததனைசொன்னதை, வாலம்-சுட்டித்தனம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/171&oldid=911308" இலிருந்து மீள்விக்கப்பட்டது