பக்கம்:வீர காவியம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169

மகப்பெறு படலம்


இயல் 76 கோளரி யாரென ஐயங் கொண்டு காளை யை வேழன் கழறினன் வியந்தே. எனவுரைத்த மொழிகேட்டு நின்ற வேழன் எல்லையிலா வியப்புற்றுத் திகைத்து நின்ருன்; 'கனவகத்தும் எனைப்பொருத நினைவோன் றன்னைக் கண்டதிலை நாவலத்தில் இந்நாள் மட்டும்: எனைநிகர்க்கும் ஏந்தலென நுவலு கின்ருன்; யாவனவன்? என் மனைவி வேல்வி ழிக்குத் தனயனிலை பெண்மகவே பிறந்த தென்ருள்; தந்துரைத்தமொழிபொய்யோ?பொய்யோ சொல்வாள்! மகனென்ருல் தனிமகிழ்வு கொள்ளுந் தாயர் மகளென்று பொய்மொழியத் துணிவார் கொல்லோ? மகனென்ருல் எனைத்தேடி வாரா தின்னும் மறைந்தங்கு வைகுவனே? வந்தே சேர்வன்; மகனென்ருல் இவனன்ருே மகனே யாவன்; மகவெனக்குப் பெண்ணுகப் பிறந்த தந்தோ! மகனிவன் ருன் யாவன்?யாண் டிருந்து தோன்றி மல்லுக்கு வருகின்ருன்? விந்தை! விந்தை! 340 எந்தல் - பெருமையிற் சிறந்தோன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/172&oldid=911310" இலிருந்து மீள்விக்கப்பட்டது