பக்கம்:வீர காவியம்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

188


இயல் 85 மன்னவன்பால் கோளரியை வியந்து வேழன் மாற்றல?னப் புனைபெயரால் பொருவேன் என்ருன். மீண்டுவரும் மாவேழன் பகைப்பு லத்தில் விளைந்தவெலாம் அரசனுக்கு விளம்பிப் பின்னர், 'ஆண்டுவரும் மாமன்ன! வந்த ஏந்தல் அடலேறு படுநடையன், அழகன், வீரன்; ஆண்டவனைப் பொருவதெனில் அரிய ஒன்றே! ஆயினும் நம் அணித்தலைவர் பொருத பின்னர் வேண்டுமெனில் அமர்புரிய வருவேன் நானே; வேறுபுனை பெயரோடு பொருது வெல்வேன். 374 படைகொண்டு வந்தவனுேர் இளைஞன்; அந்தப் பாலனெடு மாவேழன் பொருதல் நன்ருே? விடைவென்ற தோற்றத்தன் என்பேர் கேட்பின் வெலவெலத்துப் போராண்மை காட்டா தேகும்; நடைகொண்டான் அஞ்சுமெனில் அவனு ளத்தே நல்வீரம் அணுவளவும் தோன்ரு தன்ருே? தடையின்றி அவன்திறமை முழுதுங் காட்டிச் சமர் செய்ய வேண்டுமென எண்ணங் கொண்டேன். 375 ஆண்டவன-ஆண்டு+அவன; ஆண்டு-அங்கே. விடை - காளை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/191&oldid=911353" இலிருந்து மீள்விக்கப்பட்டது